அடுத்த உலக கோப்பைக்கு டீம் எப்படி இருக்குனு மட்டும் பாருங்க.. நேரடியா களத்தில் குதித்த பிரதமர்

By karthikeyan VFirst Published Jul 22, 2019, 5:38 PM IST
Highlights

உலக கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சி மற்றும் ஃபிட்னெஸ் ஆகியவை கடும் விமர்சனத்துக்கும் கிண்டலுக்கும் ஆளானது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு எதிரான அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு மீண்டெழுந்து தொடர் வெற்றிகளை பெற்றபோதிலும் பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. 
 

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 11 புள்ளிகளை பெற்றும் நெட் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றதால் பாகிஸ்தான் அணி வெளியேறியது. 

உலக கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சி மற்றும் ஃபிட்னெஸ் ஆகியவை கடும் விமர்சனத்துக்கும் கிண்டலுக்கும் ஆளானது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு எதிரான அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு மீண்டெழுந்து தொடர் வெற்றிகளை பெற்றபோதிலும் பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. 

பாகிஸ்தான் அணி தவறுகளையும் சிக்கல்களையும் கலைந்து மீண்டெழ வேண்டிய அவசியம் உள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டை வலுப்படுத்தி நிறைய திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அணியில் சேர்த்து அணியை வலுவான அணியாக கட்டமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 

இந்நிலையில், பாகிஸ்தான் அணியை வளர்த்தெடுக்கும் பணியை பிரதமரும் உலக கோப்பை வின்னிங் கேப்டனுமான இம்ரான் கான் நேரடியாக களத்தில் குதிக்கவுள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தான் அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள இம்ரான் கான், உலக கோப்பைக்கு பின்னர் பாகிஸ்தான் அணியை நானே நேரடியாக கட்டமைக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன். என் வார்த்தையை குறித்துவைத்து கொள்ளுங்கள். அடுத்த உலக கோப்பைக்கு நீங்கள் பார்க்கப்போகும் பாகிஸ்தான் அணி வேறு லெவலில் இருக்கும் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

PM Imran Khan "After the World Cup I've decided that I'll fix the Pakistan cricket team.The team you'll see in the next World Cup, remember my words that team will be a professional team. We will fix the system & bring one in which the best talent comes forward"

— Saj Sadiq (@Saj_PakPassion)

இதன்மூலம் இம்ரான் கானே நேரடியாக களத்தில் இறங்கி அணியை கட்டமைக்க இருப்பது உறுதியாகிவிட்டது. தனது அபாரமான கேப்டன்சியின் மூலம் 1992ல் பாகிஸ்தான் அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தவர் இம்ரான் கான் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!