#ENGvsPAK முதல் ஒருநாள்: பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் படுமோசமான சொதப்பல்..!

Published : Jul 08, 2021, 07:41 PM IST
#ENGvsPAK முதல் ஒருநாள்: பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் படுமோசமான சொதப்பல்..!

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் படுமோசமாக சொதப்பி, 90 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டனர்.   

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி கார்டிஃபில் இன்று மாலை இந்திய நேரப்படி 5.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இங்கிலாந்து அணியை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா உறுதியானதால் அணியை முழுவதுமாக மாற்றி, பென் ஸ்டோக்ஸ் தலைமையில் வேறு அணியை இறக்கிவிட்டு ஆடுகிறது இங்கிலாந்து அணி.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்ய பணித்ததையடுத்து, பாகிஸ்தான் அணி பேட்டிங் ஆடிவருகிறது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் டக் அவுட்டாக, அவரைத்தொடர்ந்து கேப்டன் பாபர் அசாமும் டக் அவுட்டானார்.  இருவருமே சாகிப் மஹ்முதுவின் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தனர்.

முகமது ரிஸ்வான்(13), சௌத் ஷகீல்(5), சொஹைப் மஹ்மூத்(19) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, ஒருமுனையில் நிலைத்து ஆடிய தொடக்க வீரர் ஃபகர் ஜமான் 47 ரன்னில் மேட் பார்கின்சனின் சுழலில் வீழ்ந்தார். ஃபஹீம் அஷ்ரஃபும் 5 ரன்னில் ஆட்டமிழக்க, 101 ரன்னுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து அணி.
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. உலக நாடுகளை அலறவிடப்போகும் 15 வயது சூறாவளி!
Virat Kohli: 12 சீசன்களில் 400+ ரன்கள்..! யாருமே தொட்டுப்பார்க்க முடியாத சாதனை..! மிரட்டும் கோலி