தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த 26ஆவது லீக் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக பாகிஸ்தான் முதல் முறையாக உலகக் கோப்பையில் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த 26ஆவது லீக் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக பாகிஸ்தான் முதல் முறையாக உலகக் கோப்பையில் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 26ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சவுத் சகீல் 62 ரன்களும், பாபர் அசாம் 50 ரன்களும், ஷதாப் கான் 43 ரன்களும் எடுத்தனர்.
PAK vs SA: 24 ஆண்டுகளில் முதல் முறையாக ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சாதனை!
பின்னர் 271 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியில் தொடக்க வீரர் குயீண்டன் டி காக் 24 ரன்னிலும், கேப்டன் டெம்பா பவுமா 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ரஸ்ஸி வான் டெர் டுசென் 21 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு தான் ஐடன் மார்க்ரம் களமிறங்கினார். கடைசி வரை நிதானமாக விளையாடிய மார்க்ரம் பவுண்டரி அடிக்க முயற்சித்து கடைசியில் தூக்கி அடிக்க கேட்ச் ஆகி வெளியேறினார். அப்போது அவர் 91 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி வரை சிங்கிளாக எடுத்திருந்தால் கூட சதமும் அடித்திருப்பார். அணியும் வெற்றி பெற்றிருக்கும்.
டேவிட் மில்லர் 29 ரன்னிலும், மார்கோ ஜான்சென் 20 ரன்னிலும், கெரால்டு கோட்ஸி 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அஃப்ரிடி திருப்பு முனையை ஏற்படுத்தினார். அடுத்து வந்த லுங்கி நிகிடி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக கேசவ் மகாராஜ் மற்றும் தப்ரைஸ் ஷம்சி இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவு: இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார்?
இதில், தென் ஆப்பிரிக்கா 47.2 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 271 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகள் மற்றும் நெட் ரன் ரேட் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது. இந்தியா 2ஆவது இடமும், நியூசிலாந்து 3ஆவது இடம் பிடித்துள்ளன. பாகிஸ்தான் 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக முதல் முறையாக உலகக் கோப்பையில் பாகிஸ்தான் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக தென் ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஆக்லாந்தில் நடந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நடந்த போட்டியில் நியூசிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 270 ரன்களை சேஸ் செய்ததன் மூலமாக உலகக் கோப்பையில் வெற்றிகரமாக அதிக ரன்களை சேஸ் செய்த அணியாக திகழ்கிறது. இதற்கு முன்னதாக 2011 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிராக 297 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்தது.