கேன்சரால் உயிரிழந்த 2 வயது மகள்.. பாகிஸ்தான் வீரருக்கு நேர்ந்த சோகம்

Published : May 20, 2019, 11:46 AM ISTUpdated : May 20, 2019, 11:55 AM IST
கேன்சரால் உயிரிழந்த 2 வயது மகள்.. பாகிஸ்தான் வீரருக்கு நேர்ந்த சோகம்

சுருக்கம்

பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலியின் 2 வயது மகள் புற்றுநோய் பாதிப்பால் உயரிழந்தது கிரிக்கெட் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலியின் 2 வயது மகள் புற்றுநோய் பாதிப்பால் உயரிழந்தார். 

பாகிஸ்தான் அணி, உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்தில் ஒருநாள் தொடரில் ஆடியது. இந்த தொடரில் 5 ஒருநாள் போட்டிகளில் ஒன்று முடிவில்லாமல் போன நிலையில், அடுத்த 4 போட்டிகளிலும் வென்று இங்கிலாந்து அணி தொடரை வென்றது. 

இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் ஆசிஃப் அலி இடம்பெற்று ஆடினார். ஆனால் ஆசிஃப் அலி உலக கோப்பை அணியில் இல்லை. நேற்றைய கடைசி போட்டியில் கூட 22 ரன்கள் அடித்தார் ஆசிஃப் அலி. ஆசிஃப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த ஒரு மாதமாக ஆசிஃப் அலியின் மகளுக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஆசிஃப் அலியின் மகள் உயிரிழந்தார். இதையடுத்து இங்கிலாந்திலிருந்து அப்படியே நேராக அமெரிக்கா செல்கிறார் ஆசிஃப் அலி. ஆசிஃப் அலியின் சோகம் எளிதாக ஆற்றுதற்குரியது அல்ல. 2 வயது மகளை இழந்தது ஆசிஃப் அலிக்கு மிகப்பெரிய இழப்பு. 
 

PREV
click me!

Recommended Stories

WPL 2026: ஆர்சிபி ரசிகர்கள் ஷாக்.. ஸ்டார் வீராங்கனை திடீர் விலகல்.. டெல்லியிலும் முக்கிய மாற்றம்!
டி20 உலகக் கோப்பை.. ஸ்ட்ராங் டீமை களம் இறக்கும் இங்கிலாந்து.. ஆர்ச்சர் ரிட்டன்..!