எங்கள் அணியை மட்டும் ரவுண்டு கட்டி அடிக்கிறீங்க.. பிரஸ் மீட்டில் கொந்தளித்த பாகிஸ்தான் பயிற்சியாளர்

By karthikeyan VFirst Published Jun 24, 2019, 3:33 PM IST
Highlights

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 
 

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி கண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் சொஹைலின் அதிரடியான பேட்டிங்கால் தான் அந்த அணி 308 ரன்களை குவித்தது. 

59 பந்துகளில் 89 ரன்களை குவித்தார் ஹாரிஸ் சொஹைல். ஹாரிஸ் சொஹைலுக்கு சதமடிக்கும் வாய்ப்பு இருந்தும், அவரால் டெத் ஓவர்களில் பெரிய ஷாட் ஆட முடியாததால் சதத்தை தவறவிட்டதோடு கடைசி ஓவரில் அவுட்டும் ஆனார். எனினும் அவரது அதிரடி பேட்டிங்கால் 308 ரன்களை குவித்த பாகிஸ்தான் அணி, 259 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணியை சுருட்டி வெற்றி கண்டது. 

இந்த வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்துரிடம், ஹாரிஸ் சொஹைல் டெத் ஓவர்களில் அடித்து ஆடமுடியாமல் திணறியது குறித்தும் களத்தில் நன்றாக செட்டிலான ஹாரிஸ் சொஹைல் களத்தில் இருந்தும் கடைசி 3 ஓவர்களில் வெறும் 20 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. 

இந்த கேள்வியால் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்த மிக்கி ஆர்துர், ஹாரிஸ் 59 பந்துகளில் 89 ரன்கள் அடித்துள்ளார். எதற்காக பாகிஸ்தான் வீரர்களை பற்றி மட்டும் எதிர்மறையாகவே பேசுகிறீர்கள்? இது ஹாரிஸ் சொஹைலின் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. எப்போதும் எங்கள் அணியை பற்றி எதிர்மறையாகவே எழுதாமல் ஒரு மாற்றத்திற்கு நேர்மறையாகவும் எழுந்துங்கள் என்றார். 
 

click me!