இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்றை மாற்றியமைப்போம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் முக்கியமான போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்காக ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வரலாற்றில் இதுவரையில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த உலகக் கோப்பையின் 7 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது. தற்போது 8ஆவது முறையாக உலகக் கோப்பையில் பாகிஸ்தானை எதிரகொள்கிறது. இந்த முறை இந்தியாவில் நடக்கும் போட்டி என்பதால், பாகிஸ்தானை வீழ்த்தி காலம் காலமாக இந்தியா வைத்துள்ள கௌரவத்தை காப்பாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை 1992 முதல் கடந்த 30 ஆண்டுகளாக சந்தித்து வரும் தொடர் தோல்விக்கு இந்த முறை அதுவும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்றை மாற்ற வேண்டும் என்பது பாகிஸ்தானின் முக்கிய நோக்கமாக உள்ளது. உலகக் கோப்பையில் இந்தியா பலமான அணியாக இருந்தாலும், ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தான் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தியாவில் நடக்கும் போட்டி என்பதால், 8ஆவது முறையாக உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனையை தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாபர் அசாம் கூறியிருப்பதாவது: சாதனைகள் ஒரு நாள் உடைப்பதற்காக படைக்கப்படுவது தான். ஆதலால், இந்த முறை இந்திய அணியை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாற்றை மாற்றியமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுவரையில் என்ன நடந்தது என்பது பற்றி கவலையில்லை. அடுத்து என்ன நடக்கும் என்பதில் தான் நாங்கள் முழு கவனமும் செலுத்துகிறோம். சாதனைகள் படைக்கப்படுவது உடைக்கப்படுவதற்காகவே. ஆதலால், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் தொடர் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
8ஆவது முறையாக சாதிக்குமா இந்தியா? என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்?
முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கிறோம். அதே போன்று இந்தப் போட்டியிலும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துவோம். கடந்த சில போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக சிறப்பான திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. எனினும், 2017 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2021 ல் டி 20 உலகக் கோப்பையில் தொடர் தோல்விகளை ஏற்கனவே நிறுத்திவிட்டோம். அதே போன்று இந்தப் போட்டியிலும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D