ஆஸ்திரேலியா லெவனை அடிச்சு காலி பண்ணிட்டாங்கப்பா பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Oct 31, 2019, 1:28 PM IST
Highlights

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. நவம்பர் 3ம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நடக்கிறது. 
 

தற்போது ஆஸ்திரேலிய அணி இலங்கையுடன் ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகள் முடிந்துவிட்டன. கடைசி போட்டி நாளை நடக்கவுள்ளது. அது முடிந்ததும் அடுத்ததாக நவம்பர் 3 முதல் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானுடன் ஆடுகிறது. 

இந்நிலையில், பாகிஸ்தான் அணி ஏற்கனவே ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் பாகிஸ்தான் அணி பயிற்சி போட்டியில் ஆடியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய லெவன் அணியின் கேப்டன் கிறிஸ் லின் 24 ரன்கள் அடித்தார். அந்த அணியில் அதிகபட்சமாக நாதன் மெக்ஸ்வீனி 30 ரன்கள் அடித்தார். எந்த பேட்ஸ்மேனுமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. இதையடுத்து அந்த அணி 20 ஓவரில் 134 ரன்கள் மட்டுமே அடித்தது. 

135 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாமும் ஃபகார் ஜமானும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு பாபரும் ஃபகாரும் இணைந்து 78 ரன்களை சேர்த்தனர். பாபர் அசாம் 34 ரன்களும் ஃபகார் ஜமான் 43 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். ஹாரிஸ் சொஹைலும் பொறுப்புடன் ஆடி தன் பங்கிற்கு 32 ரன்கள் அடிக்க, பாகிஸ்தான் அணி 18வது ஓவரிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

புதிய கேப்டனின் கீழ் எழுச்சியை எதிர்நோக்கியுள்ள பாகிஸ்தான் அணிக்கு இந்த வெற்றி, கண்டிப்பாக உத்வேகத்தை கொடுக்கும். 
 

click me!