#INDvsENG சென்னையில் நடக்கும் 2வது டெஸ்ட்: ஆன்லைனில் சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்

Published : Feb 08, 2021, 03:19 PM IST
#INDvsENG சென்னையில் நடக்கும் 2வது டெஸ்ட்: ஆன்லைனில் சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்

சுருக்கம்

சென்னையில் நடக்கவுள்ள 2வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் ஆன்லைனில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன.  

இந்தியா இங்கிலாந்து இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகள் சென்னையிலும் கடைசி 2 போட்டிகள் அகமதாபாத்திலும் நடக்கின்றன. சென்னையில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டி நாளையுடன் முடிகிறது. இந்த போட்டியில் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் வரும் 13ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் ஐம்பது சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைனில் விற்றுத்தீர்ந்தன.

ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை வரும் 11ம் தேதி காலை 10 மணி முதல் சென்னை சேப்பாக்கம் மைதான டிக்கெட் கவுண்டரில் காட்டி முறையாக டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.
 

PREV
click me!

Recommended Stories

Ind Vs SA: மீண்டும் ஓபனராக களம் இறக்கப்படும் சஞ்சு சாம்சன்..? தொடரைக் கைப்பற்றும் இந்தியா..?
சேப்பாக்கம் டூ சின்னசாமி.. தென்னிந்தியாவை மறந்ததா பிசிசிஐ?.. ரசிகர்கள் எழுப்பும் முழக்கம்!