மாத்தி மாத்தி பேசும் வினோத் ராய்.. நொண்டிச்சாக்கு சொல்லி நழுவும் சிஓஏ

By karthikeyan VFirst Published Jul 27, 2019, 11:18 AM IST
Highlights

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டமுடியாமல் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 
 

உலக கோப்பை தோல்வியை அடுத்து, இந்திய அணியின் செயல் திறனை மறு ஆய்வு செய்யப்படும் என்று பிசிசிஐயின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அந்தர்பல்டி அடித்துள்ளார். 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கருதப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டமுடியாமல் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

அந்த போட்டியில் இந்திய அணி 5 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தபோது, ஐந்தாம் வரிசையில் தோனியை இறக்கி ரிஷப் பண்ட்டுடன் பார்ட்னர்ஷிப் அமைக்க வழி செய்யாமல், அந்த வரிசையில் தினேஷ் கார்த்திக்கையும் அதன்பின்னர் பாண்டியாவையும் இறக்கிவிட்டு ஏழாம் வரிசையில் தோனியை இறக்கிவிட்டு அவருக்கு நெருக்கடியை அதிகரித்தது கடும் விமர்சனத்துக்கும் சர்ச்சைக்கும் உள்ளாகியது.

அதுமட்டுமல்லாமல் அணி தேர்வும் கடும் சர்ச்சையை கிளப்பியது. இந்திய அணியின் தோல்வியை அடுத்து அணியின் செயல் திறனை மறு ஆய்வு செய்ய கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆகியோருடன் கூட்டம் ஒன்று நடத்தப்படும் என பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்திருந்தார். 

ஆனால் மறுஆய்வுக்கூட்டம் எப்போது நடத்தப்படும் என்பதை கூறமுடியாது என்று கூறியிருந்தார். அந்த கூட்டத்தில், தோனியை ஏழாம் வரிசையில் இறக்கியது, உலக கோப்பைக்கான அணி தேர்வு, ராயுடு புறக்கணிப்பு, மூன்று விக்கெட் கீப்பர்கள் ஆடும் லெவனில் இருந்தது ஆகிய விவகாரங்கள் குறித்து அணி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இதுவரை அந்த மறுஆய்வுக்கூட்டம் நடத்தப்படாத நிலையில், இந்திய அணி நாளை மறுநாள் வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இந்நிலையில், அதற்கிடையே போதிய நேரம் இல்லாததால் உலக கோப்பை ஆட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்படாது என்று வினோத் ராய் இப்போதுட் தெரிவித்துள்ளார். கண் துடைப்புக்காக, ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும் என்று கூறிவிட்டு தற்போது அதிலிருந்து நிர்வாகக்குழு பின்வாங்கியுள்ளது. 
 

click me!