படுமட்டமா சொதப்பிய கேப்டன் தவான்.. நிதிஷ் ராணாவின் அதிரடியால் மெகா ஸ்கோரை அடித்த டெல்லி

By karthikeyan VFirst Published Jan 11, 2021, 2:23 PM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி, நிதிஷ் ராணாவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 206 ரன்களை குவித்தது.
 

உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி, டெல்லியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி, நிதிஷ் ராணாவின் அதிரடி அரைசதத்தால்(37 பந்தில் 74 ரன்கள்) 20 ஓவரில் 206 ரன்களை குவித்தது டெல்லி அணி.

டெல்லி அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ஷிகர் தவான் 23 பந்தில் 23 ரன்கள் மட்டுமே அடித்து அணிக்கு எந்தவிதத்திலும் பயனில்லாத இன்னிங்ஸ் ஆடிவிட்டு சென்றார். அவரது மந்தமான பேட்டிங்கால், மற்ற பேட்ஸ்மேன்களுக்குத்தான் அழுத்தம் அதிகரித்தது. மற்றொரு தொடக்க ஹிதேன் தலால் 13 பந்தில் 24 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, டெல்லி அணி 56 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஹிம்மத் சிங்கும் நிதிஷ் ராணாவும் இணைந்து மும்பை அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினர். இருவருமே அடித்து ஆடி அரைசதம் அடித்தனர். ஹிம்மத் சிங் 32 பந்தில் 53 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மிரட்டிய நிதிஷ் ராணா 37 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 74 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, கடைசி நேரத்தில் லலித் யாதவ் 10 பந்தில் 21 ரன்கள் அடித்து கேமியோ பங்களிப்பு செய்ய, 20 ஓவரில் 206 ரன்களை குவித்து, 207 ரன்கள் என்ற கடின இலக்கை மும்பை அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!