பாகிஸ்தான் அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 4 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி கராச்சியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
நியூசிலாந்து அணி:
வில் யங், டாம் பிளண்டெல், ஹென்ரி நிகோல்ஸ், டாம் லேதம் (கேப்டன்), மார்க் சாப்மேன், கோல் மெக்கான்ச்சி, ராச்சின் ரவீந்திரா, ஆடம் மில்னே, ஹென்ரி ஷிப்ளி, இஷ் சோதி, மேட் ஹென்ரி.
பாகிஸ்தான் அணி:
ஃபகர் ஜமான், ஷான் மசூத், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், இஃப்டிகார் அகமது, அகா சல்மான், ஷதாப் கான், உசாமா மிர், ஷாஹீன் அஃப்ரிடி, முகமது வாசிம், ஹாரிஸ் ராஃப்.
முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் வில் யங் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான டாம் பிளண்டெல் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வில் யங் அபாரமாக ஆடி 87 ரன்களை குவித்த நிலையில், சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேப்டன் டாம் லேதம் மிடில் ஓவர்களில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 59 ரன்களூம், மார்க் சாப்மேன் 43 ரன்களும் அடிக்க, ரவீந்திரா 28 ரன்கள் அடித்தார். பின்வரிசை வீரர்கள் மளமளவென ஆட்டமிழக்க, 49.3 ஓவரில் 299 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
300 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, ஃபகர் ஜமான்(33), ஷான் மசூத்(7), பாபர் அசாம்(1), முகமது ரிஸ்வான்(9) ஆகியோர் மளமளவென ஆட்டமிழக்க, 66 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான் அணி. அதன்பின்னர் அகா சல்மான் மற்றும் இஃப்டிகார் அகமது ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் அடிக்க, அகா சல்மான் 57 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஷதாப் கான்(14), உசாமா மிர்(20), ஷாஹீன் அஃப்ரிடி(0) ஆகிய பின்வரிசை வீரர்கள் மளமளவென ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடி போராடிய இஃப்டிகார் அகமது 72 பந்தில் 94 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தும் கூட, மற்றவீரர்கள் மளமளவென ஆட்டமிழந்ததால் 46.1 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
IPL 2023: 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மண்ணில் மும்பை அணியை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி
நியூசிலாந்து அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ராச்சின் ரவீந்திரா, ஹென்ரி ஷிப்ளி ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தாலும், தொடரை இழந்துவிட்ட நியூசிலாந்து அணிக்கு இது ஆறுதல் வெற்றியே ஆகும்.
4-1 என பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை அபாரமாக வென்றுவிட்டது. கடைசி போட்டியின் ஆட்டநாயகனாக ஹென்ரி ஷிப்ளியும், தொடர் நாயகனாக ஃபகர் ஜமானும் தேர்வு செய்யப்பட்டனர்.