உலக கோப்பை இறுதி போட்டி குறித்து மௌனம் கலைத்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்

By karthikeyan VFirst Published Jul 16, 2019, 2:56 PM IST
Highlights

உலக கோப்பை இறுதி போட்டி குறித்தும் கோப்பையை இழந்தது குறித்தும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார். 
 

உலக கோப்பை இறுதி போட்டி குறித்தும் கோப்பையை இழந்தது குறித்தும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார். 

2019 உலக கோப்பை ஃபைனல் மாதிரி ஒரு கிரிக்கெட் போட்டியை பார்ப்பது ரொம்ப அரிது. வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு வரலாற்றில் இடம்பிடித்த போட்டி அது. 

இறுதி போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 242 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி ஸ்டோக்ஸின் கடும் போராட்டத்தால் 241 ரன்கள் மட்டுமே எடுத்ததால் போட்டி டிரா ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. ஆனால் அரிதினும் அரிதாக சூப்பர் ஓவரும் டிரா ஆனது. இதையடுத்து அந்த போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்பட்டு கோப்பையும் வழங்கப்பட்டது. 

நியூசிலாந்து அணியும் கோப்பைக்கு தகுதியான அணியே. தார்மீக அடிப்படையில் எந்த அணியுமே தோற்கவில்லை. ஆனால் ஐசிசி விதிப்படி கோப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்டது. பவுண்டரிகளின் அடிப்படையில் போட்டியின் முடிவை அறிவிக்கும் வகையிலான ஐசிசி விதிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த விதியை மாற்றியமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். 

இந்நிலையில், கோப்பையை தூக்கிச்செல்ல முடியாத ஏமாற்றத்துடன் நியூசிலாந்து அணி நாடு திரும்பியது. நியூசிலாந்து சென்றதும் கேப்டன் வில்லியம்சன் உலக கோப்பை குறித்து அளித்த பேட்டியில் சில கருத்துகளை பேசியுள்ளார். இறுதி போட்டியில் யாருமே தோற்கவில்லை. ஆனால் கோப்பை ஒரு அணிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதானே தவிர யாரும் தோற்கவில்லை என்று ஓபனாக தெரிவித்துள்ளார். 

இந்த கருத்தைத்தான் உலகமே தெரிவித்திருந்தது. இந்நிலையில் அதையே வில்லியம்சனும் தெரிவித்துவிட்டார். 
 

click me!