#BANvsNZ 4வது டி20: 100 ரன்கள் கூட அடிக்காமல் ஆல் அவுட்டான நியூசிலாந்து.! வங்கதேசத்துக்கு எளிய வெற்றி வாய்ப்பு

By karthikeyan VFirst Published Sep 8, 2021, 5:32 PM IST
Highlights

4வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியை வெறும் 93 ரன்களுக்கு சுருட்டியது வங்கதேச அணி.
 

நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. முதல் 3 போட்டிகளில் வங்கதேச அணி இரண்டிலும், நியூசிலாந்து அணி ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளன. 

வங்கதேச அணி 2-1 என முன்னிலை வகிக்கும் நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20, இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் ஆடியது.

நியூசிலாந்து அணியில் வில் யங் தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. தொடக்க வீரர் ரவீந்திரா டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் ஃபின் ஆலன் 12 ரன்களிலும், கேப்டன் லேதம் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 4ம் வரிசையில் ஆடிய வில் யங் மட்டும் சிறப்பாக ஆடி 46 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் ஆடிய அனைத்து வீரர்களுமே ஒற்றை இலக்கத்திலோ அல்லது டக் அவுட்டோ ஆகி வெளியேறினர்.

சிறப்பாக ஆடிய வில் யங் 46 ரன்கள் அடித்து கடைசி ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே கடைசி விக்கெட்டையும் இழந்து நியூசிலாந்து அணி வெறும் 93 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 94 ரன்கள் என்ற எளிய இலக்கை வங்கதேசம் விரட்டுகிறது.
 

click me!