கிரிக்கெட் வரலாற்றில் 2வது வீரர்.. 1951ம் ஆண்டுக்கு பிறகு நடந்த அரிதினும் அரிதான சம்பவம்..! வீடியோ

By karthikeyan VFirst Published Nov 9, 2020, 6:45 PM IST
Highlights

நியூசிலாந்து வீரர் டாம் பிளண்டல், முதல் தர போட்டியில் அரிதினும் அரிதான முறையில் அவுட்டாகிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

நியூசிலாந்தில் பிளங்கெட் ஷீல்டு முதல் தர கிரிக்கெட் தொடர் நடந்துவருகிறது. வெலிங்டன் மற்றும் ஒடாகோ அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஒடாகோ அணி பவுலர் ஜேகப் டஃபி வீசிய பந்தில் வெலிங்டன் அணியில் ஆடிய டாம் பிளண்டல் அரிதினும் அரிதான முறையில் அவுட்டானார்.

டாம் பிளண்டல் நியூசிலாந்து அணிக்காக ஆறு டெஸ்ட், 2 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடியவர் டாம் பிளண்டல். வெலிங்டன் அணிக்காக பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது, ஜேகப் டஃபி வீசிய பந்தை தடுப்பாட்டம் ஆடினார். அவர் அடித்த பந்து தரையில் பிட்ச் ஆகி உயரமாக பவுன்ஸ் ஆனது. ஸ்டம்பில் பட்டுவிடுமோ என்று அதை காலால் தட்டினார் டாம் பிளண்டல். ஆனால் காலில் பட்டு உயரே எழும்பிய பந்து, ஸ்டம்புக்கு நேராக கீழிறங்கியது. பதற்றத்தில் பந்தை கையால் தட்டிவிட்டார் டாம் பிளண்டல்.

பந்தை பேட்ஸ்மேன் கையால் தடுக்கக்கூடாது; அப்படி தடுத்தால் அவுட். எனவே பந்தை கையால் தடுத்தற்காக அவுட்டாகி சென்றார் டாம் பிளண்டல்.  சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்த முறையில் அவுட்டான 2வது வீரர் டாம் பிளண்டல்.

🚨 WEIRD DISMISSAL KLAXON 🚨

Tom Blundell was dismissed for obstructing the field in the Plunket Shield!

Also, as an aside, can we just appreciate how many woolly hats are being worn... 🤣pic.twitter.com/hEhQfDIXl7

— The Googly (@officialgoogly)

இதற்கு முன் 1951ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் லென் ஹட்டன் இதே மாதிரிதான் அவுட்டானார். அவருக்கு பின்னர், இப்போது டாம் பிளண்டல் தான் இந்த மாதிரி அவுட்டாகியிருக்கிறார்.
 

click me!