நீங்க மட்டும் இதை செய்தால் நாம கோப்பையை தூக்கலாம்!! நியூசிலாந்து வீரர்களை உற்சாகப்படுத்திய கேப்டன் கேன் வில்லியம்சன்

By karthikeyan VFirst Published May 22, 2019, 5:45 PM IST
Highlights

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான வில்லியம்சன், சிறந்த கேப்டனாகவும் திகழ்கிறார்.

உலக கோப்பை இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. இந்த உலக கோப்பையில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளதோடு, இந்த உலக கோப்பை மிகவும் விறுவிறுப்பாகவும் கடும் போட்டியாகவும் அமையும்.

இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் கோப்பையை வெல்லும் என பரவலாக எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் கடந்த சில ஆண்டுகளாக அபாரமாக ஆடிவருகிறது. 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான வில்லியம்சன், சிறந்த கேப்டனாகவும் திகழ்கிறார். வில்லியம்சன் தலைமையிலான அணி இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்களை கொண்ட நல்ல கலவையிலான சிறந்த அணியாகவே உள்ளது. 

ரோஸ் டெய்லர், டாம் லதாம், மார்டின் கப்டில், நிகோல்ஸ், ஜேம்ஸ் நீஷம் என சிறந்த வீரர்கள் நியூசிலாந்து அணியில் உள்ளனர். நியூசிலாந்து அணி இந்த உலக கோப்பையில் கடும் சவாலான அணியாக திகழும். இந்நிலையில், இந்த உலக கோப்பை குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், இந்த உலக கோப்பை கண்டிப்பாக கடும் சவாலான தொடராக அமையும். ஒவ்வொரு போட்டியிலுமே வெல்லும் முனைப்பில் ஆட வேண்டும். அனைத்து அணிகளும் கடந்த சில ஆண்டுகளாக எப்படி ஆடிவருகிறது? எந்தளவிற்கு எழுச்சி கண்டிருக்கிறது? என்பதை பார்த்திருக்கிறோம். எனவே தொடர் முழுவதுமே கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும். 

யாரும் நூறு சதவிகிதம் பெர்ஃபெக்ட்டா ஆடமுடியாது. ஆனால் நமது திட்டங்களை சரியான முறையில் கரெட்டாக செயல்படுத்துவது மிக முக்கியம். அதுதான் நமது வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளார். நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனின் அறிவுரையை மனதில் வைத்து அந்த அணி வீரர்கள் ஆட வேண்டும். 
 

click me!