நான்லாம் இல்லங்க.. எங்க டீம்ல அவருதான் உலக கோப்பையில் தெறிக்கவிட போறாரு.. ஜோஸ் பட்லர் அதிரடி

By karthikeyan VFirst Published May 22, 2019, 5:09 PM IST
Highlights

நல்ல ஃபார்மில் எதிரணிகளை தெறிக்கவிட்டு வெற்றிகளை குவித்துவரும் இங்கிலாந்து அணி, நம்பர் 1 ஒருநாள் அணியாக திகழ்கிறது. கவாஸ்கர், பாண்டிங், ஸ்டீவ் வாக் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் இங்கிலாந்து தான் இம்முறை கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள முதன்மையான அணியாக இங்கிலாந்து அணி பார்க்கப்படுகிறது. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. 

2015 உலக கோப்பையில் மோசமாக தோற்று வெளியேறிய இங்கிலாந்து அணி, அதன்பின்னர் மிகுந்த ஆக்ரோஷத்துடன் வெகுண்டெழுந்துள்ளது. இயன் மோர்கன் ஒரு கேப்டனாக, இங்கிலாந்து அணியை அபாரமாக வளர்த்தெடுத்துள்ளார். 

நல்ல ஃபார்மில் எதிரணிகளை தெறிக்கவிட்டு வெற்றிகளை குவித்துவரும் இங்கிலாந்து அணி, நம்பர் 1 ஒருநாள் அணியாக திகழ்கிறது. கவாஸ்கர், பாண்டிங், ஸ்டீவ் வாக் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் இங்கிலாந்து தான் இம்முறை கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பேர்ஸ்டோ - ராய் அதிரடி தொடக்க ஜோடி, 3ம் வரிசையில் ரூட் என்ற நிதானம், மிடில் ஆர்டரில் இயன் மோர்கன், பட்லர் என அதிரடி வீரர்கள், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் ஆகிய ஆல்ரவுண்டர்கள் என அபாரமான அணியை கொண்டுள்ளது இங்கிலாந்து. அந்த அணியில் பேட்டிங் டெப்த் சிறப்பாக உள்ளது. கடைசி வீரர் வரை பேட்டிங் ஆடுகின்றனர். 

இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ, பட்லர், பென் ஸ்டோக்ஸ் என பல கேம் சேஞ்சர்கள் உள்ளனர். இந்நிலையில், உலக கோப்பையில் எந்த வீரர் இங்கிலாந்து அணியின் முக்கியமான வீரராக திகழ்வார் என்று ஜோஸ் பட்லர் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் தான் உலக கோப்பையில் இங்கிலாந்து அணியின் முக்கியமான வீரர். சமகால கிரிக்கெட்டில் உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அபாரமான பங்களிப்பு செய்யக்கூடியவர். இந்த உலக கோப்பையில் அவரிடமிருந்து மிகச்சிறந்த ஆட்டத்தை எதிர்நோக்கியிருக்கிறேன் என்று பட்லர் தெரிவித்தார். 

இங்கிலாந்து அணிக்கு பட்லரே ஒரு முக்கியமான வீரர் தான். அவரது நடப்பு ஃபார்மும் டெத் ஓவர்களில் அவரது பேட்டிங்கும், எதிரணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான வித்தியாசமாக அமையும். அவரே ஒரு கேம் சேஞ்சர். ஆனால் அவரே ஸ்டோக்ஸிடமிருந்து நிறைய எதிர்பார்ப்பதாகவும் ஸ்டோக்ஸ் தான் முக்கியமான வீரர் என்றும் கூறியுள்ளார். 
 

click me!