அறிமுக போட்டியிலயே ஐசிசி-யிடம் இருந்து ஆப்பை வாங்கி சொருகிக்கொண்ட சைனி

By karthikeyan VFirst Published Aug 5, 2019, 3:09 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் சைனி அறிமுகமானார். முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தியதோடு, இன்னிங்ஸின் கடைசி ஓவரை மெய்டனாக வீசியதோடு கடைசி ஓவரில் பொல்லார்டின் விக்கெட்டையும் வீழ்த்தினார். அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 
 

இந்திய அணிக்கு மற்றுமொரு மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலராக நவ்தீப் சைனி கிடைத்துள்ளார். 

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நவ்தீப் சைனி, 150 கிமீ வேகத்தில் வீசக்கூடியவர். ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக ஆடிய நவ்தீப் சைனி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு அணிகளிலும் சைனி எடுக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தியதோடு, இன்னிங்ஸின் கடைசி ஓவரை மெய்டனாக வீசியதோடு கடைசி ஓவரில் பொல்லார்டின் விக்கெட்டையும் வீழ்த்தினார். அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

நவ்தீப் சைனிக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று கேப்டன் கோலி பாராட்டியிருந்தார். இந்நிலையில், அறிமுக போட்டியிலேயே ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக ஒரு டீமெரிட் புள்ளியை பெற்றுள்ளார். நிகோல்ஸ் பூரானின் விக்கெட்டை தனது முதல் விக்கெட்டாக வீழ்த்திய சைனி, ஆக்ரோஷமாக கொண்டாடினார். எதிரணி வீரர்களிடம் ஆக்ரோஷமாக நடந்துகொள்வது ஐசிசி விதிப்படி குற்றம் என்பதால், அவருக்கு ஒரு டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை. 
 

click me!