4 அதிரடி மாற்றங்கள்.. கடைசி டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Aug 5, 2019, 2:26 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. கடைசி போட்டிக்கான உத்தேச இந்திய அணியை பார்ப்போம். 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகள் முடிந்த நிலையில், இரண்டிலுமே இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. 

இந்திய அணி தொடரை வென்றுவிட்டதால் கடைசி போட்டியில் சில வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். எனவே கடைசி போட்டியில் சில மாற்றங்கள் செய்யப்படுவது உறுதி. 

கடைசி போட்டிக்கான இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. தவான் ஃபார்மில் இல்லாமல் சொதப்பிவருகிறார். இரண்டு போட்டிகளிலுமே சரியாக ஆடவில்லை. அதுமட்டுமல்லாமல் ராகுலுக்கு வாய்ப்பே வழங்கப்படவில்லை என்பதால் கடைசி போட்டியில் தவானுக்கு பதிலாக ராகுல் களமிறக்கப்படலாம். 

அதேபோல, மனீஷ் பாண்டேவும் இரண்டு போட்டிகளிலும் ஏமாற்றிவிட்டார். எனவே முதல் இரண்டு போட்டிகளில் ஆடாத ஷ்ரேயாஸ் ஐயருக்கு கடைசி போட்டியில் வாய்ப்பளிக்கப்படலாம். 

வாஷிங்டன் சுந்தர் நன்றாகத்தான் ஆடிவருகிறார். ஆனால் தொடரை வென்றுவிட்டதால் ராகுல் சாஹரை பரிசோதிக்கும் விதமாக அவருக்கு அணியில் வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கலீல் அகமதுவுக்கு பதிலாக தீபக் சாஹர் இறக்கப்படலாம். 

கடைசி டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), க்ருணல் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சாஹர், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் சைனி. 
 

click me!