இந்தியாவின் பார்வையில் முக்கியமான போட்டி.. நியூசிலாந்து vs நமீபியா மோதல்..! டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published Nov 5, 2021, 3:28 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 1-ல் இங்கிலாந்து அணியும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டன.

அரையிறுதிக்கு க்ரூப் 1-லிருந்து 2வது அணியாக தகுதிபெற ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. 

க்ரூப் 2-ல் ஆஃப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய 3 அணிகளுக்கு இடையேயும் அரையிறுதிக்கு முன்னேற கடும் போட்டி நிலவுகிறது. சூப்பர் 12 சுற்றின் முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்விகளை தழுவிய இந்திய அணி, ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக அபார வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது.

எனவே இந்திய அணிக்கான அரையிறுதி கதவு திறந்தது. ஆஃப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தி, இந்திய அணி ஸ்காட்லாந்தையும், நமீபியாவையும் பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றால், நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் ஆஃப்கானிஸ்தானை பின்னுக்குத்தள்ளி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும். இந்திய அணி, ஸ்காட்லாந்தையும் நமீபியாவையும் வீழ்த்தினாலும், ஆஃப்கானிஸ்தான் நியூசிலாந்தை வீழ்த்தவில்லை என்றால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாது. 

இதையும் படிங்க - வெறும் இரண்டே விக்கெட்.. டி20 கிரிக்கெட்டில் பும்ராவிற்காக காத்திருக்கும் அபார சாதனை..!

அந்தவகையில், இந்திய அணியின் பார்வையில் நியூசிலாந்து அணியின் கடைசி 2 போட்டிகள் முக்கியமானவை. அந்த போட்டிகளை இந்திய அணி உற்றுநோக்கும். நியூசிலாந்து அணி கடைசி போட்டியில் ஆஃப்கானிஸ்தானை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இன்றைய போட்டியில் நமீபியாவை எதிர்கொள்கிறது. நமீபியா அணி நியூசிலாந்தை வீழ்த்துவது நடக்காத காரியம் என்றாலும், கிரிக்கெட்டில் அதிசயங்கள் நிகழலாம் என்ற நம்பிக்கையில், இந்தியாவின் பார்வையில் இது முக்கியமான போட்டி.

ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. எனவே நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் மார்டின் கப்டில், ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்கு வந்து, 93 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணிக்கு பெரிய பலம்.

இந்த போட்டியில் களமிறங்கும் நியூசிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் நியூசிலாந்து அணி ஆடுகிறது.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னெர், ஆடம் மில்னே, டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை அரையிறுதி மற்றும் ஃபைனலில் எந்தெந்த அணிகள் மோதும்..? ஷேன் வார்ன் போட்ட ரூட் மேப்

நமீபியா அணி:

ஸ்டீஃபன் பார்ட், க்ரைக் வில்லியம்ஸ், கெர்ஹார்டு எராஸ்மஸ் (கேப்டன்), டேவிட் வீஸ், ஜேஜே ஸ்மிட், ஜேன் க்ரீன் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் வான் லிங்கென், கார்ல் பிர்கென்ஸ்டாக், ஜேன் நிகால் லாஃப்டி - ஈட்டான், ருபென் ட்ரம்பெல்மேன், பெர்னார்டு ஸ்கால்ட்ஸ்.
 

click me!