டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 20ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 234 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வான்கடே மைதான பெரிய திரையில் டெல்லி வெற்றி பெற 235 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி என்று காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 20ஆவது லீக் போட்டி தற்போது வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸ் உள்பட 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் தனது முதல் போட்டியிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.
இவரைத் தொடர்ந்து இஷான் கிஷான் 42 ரன்களில் நடையை கட்டினார். திலக் வர்மா 6 ரன்களில் வெளியேற ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட் இணைந்து அதிரடி காட்டினர். இதில், ஹர்திக் பாண்டியா 39 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசியில் ரொமாரியா ஷெப்பர்ட் களமிறங்கினார்.
டிம் டேவிட் 21 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, கடைசி ஓவர் முழுவதையும் ரொமாரியா ஷெப்பர்ட் எதிர்கொண்டார். கடைசி ஓவரை ஆன்ட்ரிச் நோர்ட்ஜே வீசினார். இந்த ஓவரில் மட்டும் 4, 6, 6, 6, 4, 6 என்று வரிசையாக 34 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் 234 ரன்கள் குவித்தது. 19 ஓவர்கள் முடிவில் மும்பை 202 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி ஓவரில் 32 ரன்கள் எடுத்ததன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் குவித்தது. ஷெப்பர்ட் 10 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸ் உள்பட 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் தான் மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள பெரிய திரையில் டெல்லி வெற்றி பெற 235 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி என்று காட்டப்பட்டது. டெல்லி 2ஆவது இன்னிங்ஸை தொடங்குவதற்கு முன்னதாக பெரிய திரையில் இப்படியொரு தவறுகளுக்கு வான்கடே அதிகாரிகள் காரணமாக அமைந்துவிட்டனர்.
வான்கடே மைதானத்தில் நடந்த தவறுக்கு பிறகு, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் இந்த தவறை சரி செய்தது. தங்களது இலக்கை வெளிப்படுத்தும் விதமாக டெல்லி வெற்றி பெற 235 ரன்கள் தேவை என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது. DC, 'டில்லி, இந்த தாமதமான எழுச்சியை பேட்டிங்கின் மூலமாக எதிர்கொள்ள வேண்டிய நேரம் என்று குறிப்பிட்டது.
வான்கடே அதிகாரிகள் செய்த இந்த தவறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Shocking If True🤯🤯
📸: BCCI / Jio Cinema pic.twitter.com/IFpPXLvmK4
Dilli, time to counter this late surge, with the bat ✊🏼 pic.twitter.com/ooLLRpCVRD
— Delhi Capitals (@DelhiCapitals)