மும்பை ஜெயிக்க 50 சதவிகித வாய்ப்பு – டாஸ் வென்று பவுலிங், சூர்யகுமார் யாதவ் இல்லை!

By Rsiva kumar  |  First Published Apr 11, 2024, 8:13 PM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 25ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.


மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதுவரையில் இரு அணிகளும் மோதிய 32 போட்டிகளில் 18 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 14 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றுள்ளது.

ஆர்சிபி அணியில் வில் ஜாக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வைஷாக் விஜயகுமார் இந்தப் போட்டியில் இடம் பெற்றுள்ளார். மும்பை அணியில் ஷ்ரேயாஸ் கோபால் இடம் பெற்றுள்ளார். சூர்யகுமார் யாதவ் இம்பேக்ட் பிளேயராக விளையாட இருக்கிறார். 

Tap to resize

Latest Videos

மும்பை இந்தியன்ஸ்:

ரோகித் சர்மா, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, முகமது நபி, ஷ்ரேயாஸ் கோபால், ஜஸ்ப்ரித் பும்ரா, ஜெரால்டு கோட்ஸி, ஆகாஷ் மத்வால்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி, பாப் டூப்ளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரார், ரீஸ் டாப்ளீ, விஜயகுமார் வைஷாக், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

click me!