MI vs KKR: டாஸ் ரிப்போர்ட்.. பாதி அணியை கொத்தா மாற்றிய கேகேஆர்..! மும்பை அணியில் ஒரு மாற்றம்

Published : May 09, 2022, 07:35 PM IST
MI vs KKR: டாஸ் ரிப்போர்ட்.. பாதி அணியை கொத்தா மாற்றிய கேகேஆர்..! மும்பை அணியில் ஒரு மாற்றம்

சுருக்கம்

கேகேஆருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் கேகேஆரும் மோதுகின்றன. இந்த இரு அணிகளுக்குமே பிளே ஆஃப் வாய்ப்பு இல்லை என்பதால் இந்த போட்டி உப்புச்சப்பில்லாத போட்டிதான்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். மும்பை அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியதால் அவருக்கு பதிலாக ராமன் தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, திலக் வர்மா, கைரன் பொல்லார்டு, டிம் டேவிட், ராமன் தீப் சிங், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், குமார் கார்த்திகேயா, ஜஸ்ப்ரித் பும்ரா, ரிலே மெரிடித்.

கேகேஆர் அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆரோன் ஃபின்ச், பாபா இந்திரஜித், உமேஷ் யாதவ், ஷிவம் மாவி, அனுகுல் ராய் ஆகியோர் நீக்கப்பட்டு அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி, ஷெல்டான் ஜாக்சன், பாட் கம்மின்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கேகேஆர் அணி:

அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷெல்டான் ஜாக்சன் (விக்கெட்கீப்பர்), பாட் கம்மின்ஸ், டிம் சௌதி, வருண் சக்கரவர்த்தி.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: கம்பேக் மேட்ச்சில் காட்டடி அடித்த ஹர்திக் பாண்ட்யா.. SA-க்கு சவாலான இலக்கு!
IND vs SA 1st T20: இந்தியா பேட்டிங்..! சஞ்சு சாம்சன், நம்பர் 1 ஸ்பின்னர் நீக்கம்! பிளேயிங் லெவன்!