#DCvsMI மும்பை இந்தியன்ஸ் எப்போதுமே கெத்துதான்..! உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Apr 20, 2021, 2:18 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணியை பார்ப்போம்.
 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கிறது. கடந்த சீசனில் இறுதி போட்டியில் மோதிய இந்த இரு அணிகளும் இன்று மோதுகின்றன.

இரு அணிகளுமே இந்த சீசனின் முதல் 3 போட்டிகளில் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், 3வது வெற்றியை பெறும் முனைப்பில் இன்று ஆடுகின்றன. இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

மும்பை இந்தியன்ஸ் அணி நன்றாக செட்டில் ஆகிவிட்ட வலுவான அணி. ரோஹித், டி காக், இஷான் கிஷன், சூர்யகுமார், பாண்டியா பிரதர்ஸ், பொல்லார்டு, பும்ரா, போல்ட், ராகுல் சாஹர் ஆகிய 10 வீரர்களும் நிரந்தர வீரர்கள். 11வது இடத்தில் மட்டும் ஒரு பவுலரை மாற்றி மாற்றி இறக்கிவரும் மும்பை அணி, கடந்த போட்டியில் ஆடிய ஆடம் மில்னேவைத்தான் இந்த போட்டியிலும் ஆடவைக்கும்.

மும்பை அணி ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமே இல்லாததால் ஒவ்வொரு போட்டியிலுமே செம கெத்தாக இறங்குகிறது. மும்பை மற்றும் டெல்லி அணிகள் ஐபிஎல்லில் இதுவரை மோதிய போட்டிகளில் 16ல் மும்பை அணியும் 12ல் டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளன.

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ராகுல் சாஹர், ஆடம் மில்னே, பும்ரா, டிரெண்ட் போல்ட்.
 

click me!