#DCvsMI மும்பைக்கு எதிராக நீங்க கண்டிப்பா வேணும்..! சீனியர் வீரரை திரும்ப அழைக்கும் டெல்லி கேபிடள்ஸ்

Published : Apr 20, 2021, 02:04 PM IST
#DCvsMI மும்பைக்கு எதிராக நீங்க கண்டிப்பா வேணும்..! சீனியர் வீரரை திரும்ப அழைக்கும் டெல்லி கேபிடள்ஸ்

சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணியை பார்ப்போம்.  

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கிறது. கடந்த சீசனில் இறுதி போட்டியில் மோதிய இந்த இரு அணிகளும் இன்று மோதுகின்றன.

கடந்த சீசனின் ஃபைனலில் மும்பை அணியிடம் தோற்ற டெல்லி அணி, அதற்காக மும்பையை பழிதீர்க்கும் முனைப்பில் இன்று களமிறங்குகிறது. இந்த போட்டியில் ஒரேயொரு மாற்றம் மட்டும் செய்யப்படவுள்ளது. 

டெல்லி அணி இதற்கு முந்தைய 3 போட்டிகளையும் மும்பை வான்கடேவில் ஆடிய நிலையில், இன்றைய போட்டியை ஸ்பின்னிற்கு சாதகமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆடுகிறது. எனவே கடந்த போட்டியில் அறிமுகமான மேரிவாலா என்ற இளம் ஃபாஸ்ட் பவுலரை நீக்கிவிட்டு, இன்றைய போட்டியில் சீனியர் ஸ்பின்னர் அமித் மிஷ்ராவை களமிறக்கும்.

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், லலித் யாதவ், கிறிஸ் வோக்ஸ், ரவிச்சந்திரன் அஷ்வின், ரபாடா, ஆவேஷ் கான், அமித் மிஷ்ரா.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: கம்பேக் மேட்ச்சில் காட்டடி அடித்த ஹர்திக் பாண்ட்யா.. SA-க்கு சவாலான இலக்கு!
IND vs SA 1st T20: இந்தியா பேட்டிங்..! சஞ்சு சாம்சன், நம்பர் 1 ஸ்பின்னர் நீக்கம்! பிளேயிங் லெவன்!