அதெல்லாம் இல்லைனா கூட காரியத்தை சாதிச்சுட்டோம்ல.. ஜெயவர்தனே பெருமை

By karthikeyan VFirst Published May 14, 2019, 12:59 PM IST
Highlights

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சரியாக ஆடவில்லை. ஆனால் ஒரு கேப்டனாக அவரது செயல்பாடுகள் அபாரம். டி காக், ஹர்திக், சூர்யகுமார் யாதவ், மலிங்கா, ராகுல் சாஹர் ஆகியோர் சிறப்பாக ஆடினர். 
 

சிஎஸ்கே அணியை நான்காவது முறையாக ஐபிஎல் இறுதி போட்டியில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது. 

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சரியாக ஆடவில்லை. ஆனால் ஒரு கேப்டனாக அவரது செயல்பாடுகள் அபாரம். டி காக், ஹர்திக், சூர்யகுமார் யாதவ், மலிங்கா, ராகுல் சாஹர் ஆகியோர் சிறப்பாக ஆடினர். 

குறிப்பாக பும்ரா, ராகுல் சாஹர் ஆகியோரின் கட்டுக்கோப்பான பவுலிங்தான் சீசன் முழுதும் மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களாக மும்பை வீரர்கள் இல்லை. ஆனால் மும்பை அணி கோப்பையை வென்றுவிட்டது. ஒரு அணியாக கோப்பையை வெல்வது என்பதுதான் இலக்கு. மும்பை அணி அதை செய்துவிட்டது. 

நான்காவது முறையாக கோப்பையை வென்றதற்கு பின்னர் வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே, எங்கள் அணியும்(மும்பை) தவறு செய்தது. ஆனால் அதிலிருந்து மீண்டு சிறப்பான ஆட்டத்தை வீரர்கள் வெளிப்படுத்தினார்கள். அதுதான் முக்கியம். ஒவ்வொரு வீரரும் சீசன் முழுவதும் சிறப்பாக ஆடினார்கள். எங்களிடம் ஆரஞ்சு தொப்பி, ஊதா தொப்பியை பெற்ற வீரர்கள் இல்லை. ஆனால் அதெல்லாம் யாருக்கு வேண்டும்..? நாங்கள் கோப்பையை வென்றுவிட்டோம் என்று உற்சாகமாக பேசினார். 
 

click me!