2 தோல்வி, புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடம் – ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

Published : Apr 01, 2024, 01:15 PM IST
2 தோல்வி, புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடம் – ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் இதுவரையில் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடமான 10ஆவது இடத்தில் இருக்கிறது.

கடந்த மாதம் 22 ஆம் தேதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியின் மூலமாக இந்த 2024 ஆண்டின் 17ஆவது சீசன் தொடங்கியது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று 26ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சிஎஸ்கே 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆனால், நேற்று நடந்த டெல்லி அணிக்கு எதிரான அவே மைதானத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதே போன்று அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மரண அடி வாங்கியது.

கடைசியில் இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் மட்டும் இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை. மும்பையைத் தவிர மற்ற அணிகள் எல்லாம் குறைந்தது ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

தற்போது ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் ஐபிஎல் ஹோம் மைதான அணி வெற்றி பெற்று வரும் நிலையில் இன்று 14ஆவது ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தனது ஹோம் கிரவுண்டான வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஹோம் கிரவுண்டில் விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் தான் முதல் முறையாக அவே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பை இதுவரையில் தான் அடைந்த தோல்விக்கும், விமர்சனத்திற்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தகுந்த பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 28 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 15 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 214, இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 212 ரன்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கடைசியாக நடந்த 5 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. வான்கடே மைதானத்தில் நடந்த இரு அணிகளும் மோதிய 8 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 5 போடிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

வான்கடே மைதானம்:

பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த மைதானத்தில் ஸ்பின்னர்களுக்கு உதவக் கூடியதாக இருந்தாலும் குறுகிய பவுண்டரி லைன் அவர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். இந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மொத்தமாக 78 போட்டிகளில் விளையாடி 49 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.  

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

எல்லை மீறிய ரசிகர்.. பொறுமை இழந்த பும்ரா.. கடும் கோபத்தில் செய்த செயல்.. வைரலாகும் சம்பவம்!
4வது டி20 ரத்து: மேட்ச் தான் நடக்கலயே.. டிக்கெட் பணத்தை திருப்பி கொங்க.. ரசிகர்கள் ஆதங்கம்