இளம் வீரரை டெல்லி அணிக்கு கொடுத்துட்டு வெளிநாட்டு வீரரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்

Published : Aug 01, 2019, 03:09 PM IST
இளம் வீரரை டெல்லி அணிக்கு கொடுத்துட்டு வெளிநாட்டு வீரரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்

சுருக்கம்

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ், தங்கள் அணியின் வீரர் ஒருவரை டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு கொடுத்துவிட்டு அந்த அணியில் ஆடிய வெளிநாட்டு வீரரை தங்கள் அணிக்கு எடுத்துள்ளது.

ரோஹித் சர்மாவின் தலைமையில் 2013, 2015, 2017, 2019 ஆகிய நான்கு சீசன்களில் ஐபிஎல் கோப்பையை வென்றது. ஹர்திக் பாண்டியா, பும்ரா போன்ற திறமைகளை அடையாளம் காட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி, 2018 சீசனில் மயன்க் மார்கண்டே என்ற ஸ்பின்னரை எடுத்தது. அவர் 2018 சீசனில் நன்றாக ஆடினார். 

ஆனால் 2019 சீசனில் அவருக்கு பெரிதாக வாய்ப்பளிக்கப்படவில்லை. அவரும் சரியாக ஆடவில்லை. ஆனால் அவரது இடத்தை அபாரமாக பந்துவீசிய ராகுல் சாஹர் கைப்பற்றிவிட்டார். 2019 சீசனில் அபாரமாக வீசிய ராகுல் சாஹர், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 அணியிலும் எடுக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், மயன்க் மார்கண்டேவை டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு கொடுத்துவிட்டு அந்த அணியில் ஆடிவந்த ரூதர்ஃபோர்டை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்துள்ளது. ரூதர்ஃபோர்டு ஃபாஸ்ட் பவுலர் தான் என்றபோதிலும் கடந்த சீசனில் பேட்டிங்கிலும் அசத்தியுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

IND vs SL: கபில் தேவ்வுடன் எலைட் லிஸ்ட்டில் இணைந்த 'சர்' ஜடேஜா! டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை!
Galle Test: 462 ரன்கள் குவித்த இந்தியா... சரசரவென சரிந்த இலங்கை டாப் ஆர்டர்..!