MI vs LSG: மும்பை அணியில் ஒரேயொரு மாற்றம்.. வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Apr 15, 2022, 08:49 PM IST
MI vs LSG: மும்பை அணியில் ஒரேயொரு மாற்றம்.. வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் படுமோசமாக ஆடி தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது. இந்த சீசனில் இதுவரை ஆடிய  5 போட்டிகளிலுமே ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

எனவே முதல் வெற்றியை பெறும் வேட்கையில் இருக்கும் மும்பை அணி, நாளை(ஏப்ரல் 16) மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸை எதிர்கொள்கிறது. லக்னோ அணி அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகிறது. 

எனவே நாளைய போட்டி மிகக்கடுமையாக இருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்படும். 3 வெளிநாட்டு வீரர்களுடன் மட்டுமே இதுவரை மும்பை அணி ஆடிவந்தது. மும்பை அணியின் ஸ்பின் பவுலிங் அட்டாக் பலவீனமாக இருப்பதால், அதை வலுப்படுத்தும் பொருட்டு வெஸ்ட் இண்டீஸ் ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டரான ஃபேபியன் ஆலன் அணியில் சேர்க்கப்படலாம். ஆலன் ஆடுவதால் ஜெய்தேவ் உனாத்கத் - பேசில் தம்பி ஆகிய இருவரில் ஒருவர் நீக்கப்படுவார்.

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), டிவால்ட் பிரெவிஸ், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கைரன் பொல்லார்டு, ஃபேபியன் ஆலன், முருகன் அஷ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, ஜெய்தேவ் உனாத்கத், டைமல் மில்ஸ்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸில் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்படாது. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் லக்னோ அணி களமிறங்கும்.

உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆயுஷ் பதோனி, ஜேசன் ஹோல்டர், க்ருணல் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டி20 உலகக்கோப்பை: இந்திய அணி நாளை அறிவிப்பு.. கில் Vs சஞ்சு Vs இஷான் கிஷன்.. வலுக்கும் போட்டி
Ind Vs SA: மீண்டும் ஓபனராக களம் இறக்கப்படும் சஞ்சு சாம்சன்..? தொடரைக் கைப்பற்றும் இந்தியா..?