#PSL தகுதிச்சுற்று போட்டியில் இஸ்லாமாபாத் அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த முல்தான் சுல்தான்ஸ் அணி

Published : Jun 21, 2021, 08:49 PM IST
#PSL தகுதிச்சுற்று போட்டியில் இஸ்லாமாபாத் அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த முல்தான் சுல்தான்ஸ் அணி

சுருக்கம்

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் தகுதிச்சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணி, 20 ஓவரில் 180 ரன்களை குவித்து, 181 ரன்கள் என்ற கடின இலக்கை இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு நிர்ணயித்துள்ளது.  

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் தகுதிச்சுற்று போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும் முல்தான் சுல்தான்ஸ் அணியும் மோதுகின்றன. அபுதாபியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

முல்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான முகமது ரிஸ்வான் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரரான ஷான் மசூத் 25 ரன் அடித்தார். ரிலீ ரூசோ டக் அவுட்டானார். 3ம் வரிசையில் ஆடிய சொஹைப் மக்சூத் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 

மக்சூத் 59 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் சார்லஸ் அதிரடியாக ஆடி 21 பந்தில் 41 ரன்களையும், குஷ்தில் ஷா 22 பந்தில் 42 ரன்களையும் விளாச 20 ஓவரில் 180 ரன்களை குவித்தது.

இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் உஸ்மான் கவாஜா, காலின் முன்ரோ, ஆசிஃப் அலி என ஃபார்மில் உள்ள அதிரடி வீரர்கள் அணியில் இருந்தாலும் நாக் அவுட் போட்டியில் 181 ரன்கள் என்ற இலக்கு என்பது மிகக்கடினமான இலக்கே.
 

PREV
click me!

Recommended Stories

2nd T20: இலங்கையை மீண்டும் ஊதித்தள்ளிய இந்தியா! ஷெபாலி வர்மா 'சரவெடி' அரைசதம்!
பெங்களூரு சின்னசாமியில் விராட் கோலி ஆட்டம்.. ஆனால் ரசிகர்கள் பார்க்க முடியாது.. ஏன் தெரியுமா?