நாங்க ஏற்கனவே வேலைய ஆரம்பிச்சுட்டோம்.. தோனி ஓய்வு குறித்து தேர்வுக்குழு தலைவர் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 22, 2019, 10:01 AM IST
Highlights

மூன்று விதமான அணிகளுக்கும் ரிஷப் பண்ட் தான் முதன்மை விக்கெட் கீப்பர். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் மாற்று விக்கெட் கீப்பர் எடுக்கப்படவில்லை. டெஸ்ட் அணிக்கு மட்டும் ரித்திமான் சஹா மாற்று விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 

உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி ஓய்வு குறித்து வாய்திறக்காமல் மௌனம் காத்துவருகிறார். ஆனால் தோனி ஓய்வு அறிவிக்காவிட்டாலும் கூட, இந்திய அணியின் எதிர்காலத்தை மனதில்வைத்து, அடுத்த விக்கெட் கீப்பரை வளர்த்தெடுக்கும் பணிகளை அணி நிர்வாகம் தொடங்கிவிட்டது. 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று அணிகளும் நேற்று அறிவிக்கப்பட்டன. துணை ராணுவப்படை பயிற்சிக்கு செல்வதால், தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடவில்லை என்பதை தோனி ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக பிசிசிஐக்கு அறிவித்துவிட்டார்.

எனவே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மூன்று விதமான போட்டிகளுக்கும் முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோனி வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து விலகாவிட்டாலும் ரிஷப் பண்ட் தான் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் என்பதை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஏற்கனவே தெரிவித்துவிட்டார்.

மூன்று விதமான அணிகளுக்கும் ரிஷப் பண்ட் தான் முதன்மை விக்கெட் கீப்பர். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் மாற்று விக்கெட் கீப்பர் எடுக்கப்படவில்லை. டெஸ்ட் அணிக்கு மட்டும் ரித்திமான் சஹா மாற்று விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்திய அணியை அறிவித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் தோனியின் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எம்.எஸ்.கே.பிரசாத், ஓய்வு என்பது முழுக்க முழுக்க வீரரின் தனிப்பட்ட முடிவு. அதிலும் தோனி மாதிரியான லெஜண்ட் வீரருக்கு எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது நன்கு தெரியும். இந்த தொடரில் தோனி இல்லை. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனை வளர்த்தெடுக்கும் பணியை தொடங்கிவிட்டோம். உலக கோப்பை வரை ஒரு திட்டம் வைத்திருந்தோம். உலக கோப்பைக்கு பின்னர் சில திட்டங்கள் இருக்கிறது. ரிஷப் பண்ட்டை இந்திய அணியின் விக்கெட் கீப்பராக வளர்த்தெடுக்கும் வகையில், அவருக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.  
 

click me!