#AUSvsIND ரோஹித் கம்பேக்.. அவங்க 2 பேரில் ஒருவர் காலி..! ரோஹித்தின் ரோல் என்ன..?

By karthikeyan VFirst Published Dec 30, 2020, 9:51 PM IST
Highlights

ஆஸி.,க்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெறுவதால், மயன்க் அகர்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரில் ஒருவர் நீக்கப்படுவது உறுதி.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸி., அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டியில் கோலி, ஷமி ஆகிய நட்சத்திர வீரர்கள் யாருமே இல்லாமல் ரஹானேவின் கேப்டன்சியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

3வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 7ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. அந்த போட்டியில் ரோஹித் சர்மா ஆடவுள்ளார். முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் காயத்தால் ஆடாத ரோஹித் சர்மா, தற்போது ஆஸி.,யில் குவாரண்டினில் உள்ளார். 3வது டெஸ்ட்டுக்கு முன் குவாரண்டினை முடித்து போட்டிக்கு தயாராகிவிடுவார்.

எனவே ரோஹித் சர்மா அணியில் நுழைந்தால் மயன்க் அகர்வால் மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய இருவரில் ஒருவர் அணியிலிருந்து நீக்கப்படுவார். இப்போதைய சூழலில் ஷுப்மன் கில் அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்பில்லை. அறிமுக போட்டியிலேயே(மெல்போர்ன் டெஸ்ட்) சிறப்பாக ஆடினார். ஆனால் மயன்க் அகர்வால் தான் 2 போட்டிகளிலுமே சரியாக ஆடவில்லை.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், ரோஹித் சர்மா அணிக்குள் நுழைவதால், மயன்க் அகர்வால் மற்றும் விஹாரி ஆகிய இருவரில் ஒருவர் நீக்கப்படுவார். கடந்த ஒன்றரை ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் சதம் மற்றும் இரட்டை சதம் அடித்து அசத்திய மயன்க் அகர்வால் நீக்கப்பட்டால், அது மிகக்கடினமான முடிவாக இருக்கும்.  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடவுள்ள ரோஹித் சர்மா தொடக்க வீரராக இறங்க விரும்புவாரா? அல்லது மிடில் ஆர்டரில் இறங்குவாரா என்பது கேள்வியாக உள்ளது.

என்ன மாதிரியான ரோலை அணி நிர்வாகம் அவருக்கு வழங்கவுள்ளது என்று பார்க்க வேண்டும். ரோஹித்திடமிருந்து அணி நிர்வாகம், அதிரடியான தொடக்கத்தை எதிர்பார்க்கிறதா அல்லது மிடில் ஆர்டரில் நிலைத்து ஆட வைக்க விளைகிறதா என்று பார்க்க வேண்டும் என்று எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.
 

click me!