லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், தோனி தோனி என்று கோஷமிட்ட ரசிகர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்ட எம்.எஸ்.தோனியின் வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 34ஆவது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 176 ரன்கள் குவித்தது. இதில், ஷிவம் துபே, ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், சமீர் ரிஸ்வி என்று அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்.எஸ்.தோனி மட்டும் கடைசியில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க சிஎஸ்கே 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது.
இதையடுத்து பீல்டிங் செய்ய தயாரான தோனியைப் பார்த்து ரசிகர்கள் தோனி தோனி என்று கோஷமிட்டனர். அப்போது அவர்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்ட தோனி பீல்டிங் செய்ய மைதானத்திற்குள் சென்றார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
ஆனால் இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் 53 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குயீண்டன் டி காக் 43 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 54 ரன்கள் எடுத்தார்.
இதுவரையில் சிஎஸ்கே விளையாடிய 7 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 23 ஆம் தேதியைத் தொடர்ந்து, தனது ஹோம் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
" Dhoni Dhoni" Chants then MS Dhoni turns back and acknowledge the fans for their love 💛 pic.twitter.com/ehCHN9w77n
— 🎰 (@StanMSD)