காயத்திலிருந்து மீண்டு வரும் முகமது ஷமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இடம் பெற்று 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் கைப்பற்றி மிகப்பெரிய பங்கி வகித்தவர் முகமதி ஷமி. ஆனால், இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது ஒவ்வொரு இந்திய ரசிகருக்கும் வேதனை அளித்தது. இந்த தொடரின் போது முகமது ஷமி தசைநார் பகுதியில் காயம் அடைந்தார்.
இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷமி, தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார். இது தொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஷமி, அதில், காயங்கள் உங்களை வரையறுக்காது. உங்களது மறுபிரவேசம் எனது அணியுடன் திரும்பி வர காத்திருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்தியாவில் ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முகமது ஷமி இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெறவில்லை. கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக பந்து வீசி பர்பிள் கேப் வென்றார்.
இந்த நிலையில் தான் இந்த ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து, ஜூ 1 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இதில் இடம் பெற வேண்டும் என்பதற்காக ஷமி தன்னை தீவிரமாக தயார்படுத்தி வருகிறார்.