திரும்ப வந்த தீபக் சாஹர் – டாஸ் வென்ற லக்னோ பவுலிங் – சிஎஸ்கே வெற்றி பெற 50 சதவிகித வாய்ப்பு!

By Rsiva kumar  |  First Published Apr 19, 2024, 7:46 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான 34ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங் தேர்வு செய்தார்.


ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 34ஆவது லீக் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். சிஎஸ்கே அணியில் தீபக் சாஹர் திரும்ப வந்துள்ளார். மேலும், மொயீன் அலிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:

Tap to resize

Latest Videos

குயீண்டன் டி காக், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயூஷ் பதோனி, குர்ணல் பாண்டியா, மேட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மோசின் கான், யாஷ் தாக்கூர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்கியா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஷ்டாபிஜூர் ரஹ்மான், மதீஷா பதிரனா.

இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. மேலும், ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. இந்த சீசனில் லக்னோ விளையாடிய 6 போட்டிகளில் 3ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.

கடந்த 4 போட்டிகளில் அவே அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று லக்னோவில் சிஎஸ்கே விளையாடும் போட்டியில் வெற்றி பெறுவதற்கு 50 சதவிகித வாய்ப்புகள் இருக்கிறது.

click me!