தோனி அளித்த மோசடி புகாரில் முன்னாள் தொழில் கூட்டாளி கைது!

By Rsiva kumarFirst Published Apr 12, 2024, 7:49 AM IST
Highlights

கடந்த ஆண்டு தோனி அளித்த மோசடி புகாரின் பேரின் அவரது தொழில் கூட்டாளியான ஆர்கா ஸ்போர்ட்ஸ் அகாடமியின் அதிகாரி மிஹிர் திவாகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், விளையாடிய 5 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், தான் தோனியின் முன்னாள் தொழில் கூட்டாளியான மிஹிர் திவாகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் அகாடமி ஒப்பந்தம் தொடர்பாக ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்டின் அதிகாரிகள் இருவர் மீது கிரிக்கெட் வீரர் தோனி ராஞ்சியில் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார்.

உலகளவில் கிரிக்கெட் அகாடமியை நடத்துவதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு தோனியுடன் திவாகர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், ஆனால் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஆர்கா ஸ்போர்ட்ஸ் ஒரு உரிமைக் கட்டணத்தைச் செலுத்தவும், ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி லாபத்தைப் பகிர்ந்து கொள்ளவும் கடமைப்பட்டிருக்கிறது. அவை மதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பலமுறை இது குறித்து கேட்ட போதிலும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் புறக்கணிக்கப்பட்டதாகக் சொல்லப்படுகிறடு. இதனால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அதிகார கடிதத்தை திரும்பப் பெறத் தூண்டினார். எனினும், நிறுவனத்தை திறந்து தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் தான் தோனி அளித்த புகாரின் பேரில் ஆர்கா ஸ்போர்ட்ஸ் அகாடமி அதிகாரி மிஹிர் திவாகரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் விதி அசோசியேட்ஸ் மூலம் தோனியை பிரதிநிதித்துவப்படுத்தும் தயானந்த் சிங், ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவும், இதனால் ரூ.15 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறி டெல்லி உயர்ந்தீதிமன்றத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!