#ICCWTC அஷ்வின் - ஜடேஜா 2 பேரில் ஒருவருக்குத்தான் டீம்ல இடம்னா அது அஷ்வினுக்குத்தான்..!

By karthikeyan VFirst Published May 27, 2021, 10:24 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் குறித்து இங்கிலாந்து முன்னாள் ஸ்பின்னர் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்தார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மட் போட்டிகளுக்கு உலக கோப்பையை நடத்தும் ஐசிசி, முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கான சாம்பியன்ஷிப் தொடரை நடத்துகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி போட்டிக்கு முந்தைய போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதலிரண்டு இடங்களை பிடித்தன. இதையடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மேட்ச் வரும் ஜூன் 18-22ல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கிறது.

ஃபைனலில் வெற்றி பெற்று முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் முனைப்பில் தான் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே உள்ளன.  வலுவான இரு அணிகள் இறுதி போட்டியில் மோதுவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து முன்னாள் ஸ்பின்னர் மாண்டி பனேசர், சவுத்தாம்ப்டனில் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஸ்பின்னர்கள் தான் முக்கிய பங்குவகிப்பார்கள். ஐசிசி எப்படிப்பட்ட பிட்ச்சை உருவாக்குகிறது என்பதை முதலில் பார்க்க வேண்டும். இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர்களுக்கு பொதுவாக பசுமையான பிட்ச் தான் தயார் செய்யப்படும். ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு நடுநிலையான பிட்ச்சை ஐசிசி தயார் செய்ய வேண்டும். 

என்னை பொறுத்தமட்டில் ஜடேஜா தான் “எக்ஸ் ஃபேக்டர்”. ஐபிஎல்லில் அவர் டெரிஃபிக்கான ஃபார்மில் இருந்தார். இந்தியா ஒரேயொரு ஸ்பின்னருடன் ஆடப்போகிறது என்றால், என்னுடைய தேர்வு ஜடேஜா தான். அந்த ஒரு ஸ்பின்னராக அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜாவைத்தான் எடுக்க வேண்டுமென்பேன். ஜடேஜா இடது கை ஸ்பின்னர் என்பதால் அது கூடுதல் வலுசேர்க்கும் என்றார் மாண்டி பனேசர்.
 

click me!