சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிநடை போடும் இந்த இந்திய அணி கோலியோடது இல்ல.. சாஸ்திரியோட டீம் - மாண்டி பனேசர்

By karthikeyan VFirst Published May 28, 2021, 5:11 PM IST
Highlights

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கேப்டன் கோலியின் அணி அல்ல என்றும் இது பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் அணி என்றும் இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் வெற்றிகளை குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. இந்திய அணியின் வெற்றிக்கு கேப்டன் விராட் கோலியும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுமே காரணம்.

சாஸ்திரிக்கு முன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுடன் கேப்டன் விராட் கோலிக்கு நல்ல உறவும் புரிதலும் இல்லாமல் இருந்த நிலையில், ரவி சாஸ்திரியுடன் கோலி நன்றாக செட் ஆகிவிட்டார். சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்தபின்பும், அவரையே தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக நீடிக்கவைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதன்படி, சாஸ்திரியே தொடர்ந்து பயிற்சியாளராக நீடிக்கிறார்.

இந்திய அணி 3 விதமான போட்டிகளிலும் வெற்றிகளை குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், இந்த வெற்றிகளுக்கு ரவி சாஸ்திரியே முக்கிய காரணம் என்றும், இது கோலியின் அணி அல்ல; சாஸ்திரியின் அணி என்றும் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாண்டி பனேசர், அண்மைக்காலமாக இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்றுவரும் நிலையில், அதை ஆராய்ந்து பார்த்தால், இந்த இந்திய அணி கோலியுடையது அல்ல; ரவி சாஸ்திரியுடையது என்பது புலப்படும். இந்திய அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்தது சாஸ்திரி தான். ஆஸ்திரேலியாவில் ஒரு இன்னிங்ஸில் 36 ரன்னுக்கு சுருண்ட இந்திய அணி, தொடரை வென்றது அபாரமானது. அதுவும் விராட் கோலி ஆடாமலேயே இந்திய அணி ஜெயித்தது. ரவி சாஸ்திரி அவரது பணியை செவ்வனே செய்ததால் தான், ஆஸி., சுற்றுப்பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது என்றார் மாண்டி பனேசர்.
 

click me!