என் பையன் மேட்ச் வின்னர்! தன் மகனை பற்றி தானே பெருமையாக பேசும் பாக்., முன்னாள் வீரர்! தன்னடக்கத்தின் உச்சம்

Published : Sep 15, 2021, 09:41 PM IST
என் பையன் மேட்ச் வின்னர்! தன் மகனை பற்றி தானே பெருமையாக பேசும் பாக்., முன்னாள் வீரர்! தன்னடக்கத்தின் உச்சம்

சுருக்கம்

அசாம் கானை டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் எடுத்தது கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், அவரது தந்தையும் முன்னாள் வீரருமான மொயின் கான், தனது மகனின் தேர்வு குறித்து பேசியுள்ளார்.  

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் முன்னாள் வீரர் மொயின் கானின் மகன் அசாம் கான் எடுக்கப்பட்டுள்ளார். உடல் எடை அதிகமாகவுள்ள அசாம் கான் பாகிஅணியில் எடுக்கப்பட்டபோதே, அவரது ஃபிட்னெஸ் விமர்சனத்துக்குள்ளானது. பாகிஸ்தான் அணியில் கிரிக்கெட்டர்களை விட மல்யுத்த வீரர்கள் தான் அதிகமாகவுள்ளதாக, முன்னாள் வீரர் ஆகீப் ஜாவேத் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான அணியில் அசாம் கான் விக்கெட் கீப்பராக எடுக்கப்பட்டுள்ளார். சீனியர் விக்கெட் கீப்பரான சர்ஃபராஸ் அகமதுவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அசாம் கான் தான் மெயின் விக்கெட் கீப்பராக எடுக்கப்பட்டுள்ளார். அசாம் கானை விக்கெட் கீப்பராக எடுத்த முடிவை ரஷீத் லத்தீஃப் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அசாம் கானின் தேர்வு மீது விமர்சனங்கள் இருந்துவரும் நிலையில், அதுகுறித்து பேசியுள்ள அவரது தந்தையும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரருமான மொயின் கான், அனைவரும் அசாம் கானின் ஃபிட்னெஸ் பற்றி பேசுகிறார்கள். ஃபிட்னெஸ் முக்கியம் தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஃபிட்னெஸ் நன்றாக இருந்த வீரர்கள் சரியாக ஆடாமல் தொடர்ந்து சொதப்பியதை பார்த்திக்கிறோம். அணிக்காக சிறப்பாக ஆடுவதுதான் முக்கியம். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அவரது அணிக்கு பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். அசாம் மீதான விமர்சனங்களை பற்றி கவலையில்லை. விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அவருக்கு சொல்லி கொடுத்திருக்கிறேன். விமர்சனங்கள் ஒரு வீரரை மேம்படுத்தும். ஆனால் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அசாம் கான் மிகப்பெரிய மேட் ச் வின்னர் என்று தன் மகனை பற்றி தானே பெருமையாக பேசியுள்ளார் மொயின் கான்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs WI 4th T20: 2 அதிரடி மாற்றம்.. வைபவ் சூர்யவன்ஷி கம்பேக்.. சிக்சர் மன்னனுக்கு இடமில்லை.. பிளேயிங் லெவன்!
IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!