Mohmamed Shami with His Daughter Aaira: இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மகள் ஐராவைச் சந்தித்தார். ஷாப்பிங் அழைத்துச் சென்று மகளுக்குப் பிடித்த பொருட்களை வாங்கிக் கொடுத்தார்.
கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சற்று வருத்தப்படக் கூடியதாகவே இருக்கிறது. அதற்கு ஒரு சிலரது வாழ்க்கையை உதாரணமாக சொல்லலாம். ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ஷிகர் தவான். திருமண வாழ்க்கையிலிருந்து விவாகரத்து பெற்று விலகியுள்ளனர். இதனால், அவர்கள் எதிர்கொண்ட மன வேதனை ஏராளம். பெற்ற பிள்ளைகளை பிரிந்து தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அப்படி ஒரு கிரிக்கெட் வீரர் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது மகளை சந்தித்து என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க….
கோலியை ஏமாத்தி ஏமாத்தி விளையாடிய அனுஷ்கா சர்மா – மனைவியை 2 முறை போல்டு ஆக்கிய கோலி – வீடியோ வைரல்!
undefined
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு பிறகு காயம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து விலகியிருக்கிறார். இதுவரையில் ஒரு தொடரில் கூட இடம் பெறவில்லை. வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, ஐபிஎல் 2025 தொடரிலும் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
இது தவிர, ஷமி தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்தார். கருத்து வேறுபாடு காரணமாக, ஷமி தனது மனைவி ஹசீன் ஜஹானை விட்டு பிரிந்தார். இதன் காரணமாக ஷமி தனது அன்பு மகளான ஐராவை சந்திக்க முடியவில்லை. இதற்காக பல முறை வருத்தப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் தான் நீண்ட நாட்களுக்கு பிறகு ஷமி ஐராவை சந்தித்துள்ளார். மேலும், மகளை ஷாப்பிங்கிற்கும் அழைத்து சென்று மகளுக்கு வேண்டிய எல்லாவற்றையும் வாங்கி கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பான வீடியோவை ஷமி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஷமி மற்றும் ஐரா இருவரும் ஒன்றாக சுற்றுவதை பார்க்கலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு மகளை சந்தித்தேன். ஐரா மிகவும் பெரியவளாகிவிட்டாள் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது பெங்களூரு என்சிஏவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஷமி பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரையில் 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முகமது ஷமி 229 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதே போன்று 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷமி 24 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.