Virat Kohli And Anushka Sharma Played Cricket: வங்கதேச தொடரை முடித்த கையோடு லண்டனில் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் தெரு கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளார் விராட் கோலி. ஆனால், அனுஷ்கா அமைத்த வினோதமான விதிமுறைகளால் கோலி அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி, களத்திலிருந்து வெளியேறும் சூழலும் உருவானது.
விராட் கோலி அனுஷ்கா சர்மா கல்லி கிரிக்கெட்: இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெற்று விளையாடினார். 2 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்று வென்று வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரை வெற்றிகரமாக முடித்த கையோடு விராட் கோலி அவசர அவசரமாக லண்டன் புறப்பட்டுச் சென்றார். தற்போது லண்டனிலிருக்கும் கோலி, மனைவி அனுஷ்கா சர்மா உடன் இணைந்து தெரு கிரிக்கெட் விளையாடி மகிழந்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு பிறகு விராட் கோலி லண்டனிலிருக்கும் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வந்தார். அதன் பிறகு வங்கதேச தொடருக்காக இந்தியா வந்த கோலி மீண்டும் ஓய்விற்காக லண்டன் சென்றார். லண்டனில் மனைவியுடன் கிரிக்கெட் விளையாடி வரும் வீடியோ வைரலாகி வருகிறது.
Gully cricket - feat Virat Kohli and Anushka Sharma pic.twitter.com/mjBekEzbI0
— sujay anand (@imsujayanand)
இந்த கிரிக்கெட்டுக்கு என்று அனுஷ்கா சர்மா விதிமுறைகளை வகுத்துள்ளார். அந்த விதிமுறைகளை கேட்டதும் விராட் கோலி அதிர்ச்சி அடைந்தார். அதுமட்டுமின்றி அவர் களத்திலிருந்து வெளியேறிவிட்டார். அது என்ன விதிமுறை என்றால், பேட் வைத்திருப்பவர் முதலில் பேட் செய்ய வேண்டும், பெரிய ஷாட் அடிப்பவர்கள் தான் பந்து எங்கு சென்றாலும் அதனை தேடி பிடித்து எடுத்து வர வேண்டும் என்று அனுஷ்கா சர்மா வித்தியாசமான விதிகளை அறிவித்தார்.
இந்த விதிமுறைகளை கேட்ட விராட் கோபம் கொண்டார். எனினும், அதனை ஏற்றுக் கொண்டு இருவரும் விளையாடினர். முதலில் அனுஷ்கா சர்மா பேட்டிங் செய்தார். முதல் பந்திலேயே அனுஷ்கா சர்மாவை கோலி கிளீன் பவுல்டு செய்தார். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாத அனுஷ்கா சர்மா, டிரையல் பந்து என்றார். அதன் பின்னரும் அனுஷ்கா சர்மா ஆட்டமிழக்கவே, விராட் கோலி பேட்டிங் செய்தார்.
அபாரமாக பேட்டிங் செய்த கோலி பெரிய ஷாட் அடித்தார். ஆனால், அனுஷ்கா சர்மா, யார் பந்தை அடித்தாலும் அவர்கள் தான் பந்தை எடுத்து வர வேண்டும் என்றார். அதன் பிறகு அடித்த பந்தை தேடி விராட் கோலி சென்றார். பந்தை கொண்டு வந்த பிறகு மீண்டும் போட்டி நடைபெற்றது. இதில் விராட் கோலியை பவுல்டு செய்தார். விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா வரும் நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 16 ஆம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. 24ஆம் தேதி தொடங்கும் 2ஆவது டெஸ்ட் புனேயிலும், நவம்பர் 1ஆம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையிலும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் இடம் பெற்று விளையாடி வருகிறார்.