என் 12 வயசு மகனுக்கு உங்களவிட கிரிக்கெட் நல்லாவே தெரியும்..! முன்னாள் வீரரை அசிங்கப்படுத்திய முகமது ஹஃபீஸ்

Published : Nov 24, 2020, 05:12 PM IST
என் 12 வயசு மகனுக்கு உங்களவிட கிரிக்கெட் நல்லாவே தெரியும்..! முன்னாள் வீரரை அசிங்கப்படுத்திய முகமது ஹஃபீஸ்

சுருக்கம்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரமீஸ் ராஜாவை, பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரரான முகமது ஹஃபீஸ் படுமட்டமாக அசிங்கப்படுத்தியுள்ளார்.  

பாகிஸ்தான் அணியில் முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் பலர் இன்னும் ஆடிவருகின்றனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையையும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, இளம் வீரர்களை கொண்ட அணியை கட்டமைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

அந்தவகையில், சீனியர் வீரர்களான முகமது ஹஃபீஸ் போன்ற வீரர்கள் மரியாதையுடன் ஓய்வுபெற்றுக்கொண்டு இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா தெரிவித்திருந்தார்.

அதற்கு, ரமீஸ் ராஜாவை அசிங்கப்படுத்தும் விதமாகவும் மூக்கை உடைக்கும் விதமாகவும் அதிகப்பிரசங்கித்தனமாகவும் தலைக்கணத்துடனும் பதிலடி கொடுத்துள்ளார் முகமது ஹஃபீஸ்.

ரமீஸ் ராஜாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்து பேசிய முகமது ஹஃபீஸ், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக ஆடி பங்களிப்பு செய்திருக்கிறார் என்ற வகையில் ஒரு கிரிக்கெட் வீரராக ரமீஸ் ராஜாவை நான் மதிக்கிறேன். ஆனால் எனது  12 வயது மகனுக்கு அவரைவிட நன்றாகவே கிரிக்கெட் தெரியும். அவரது யூடியூப் சேனலை பிரபலப்படுத்த அவர் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பார் என்றால், நான் அவரை தடுக்கவில்லை. ஆனால் நான் முழு உடற்தகுதியுடன் நன்றாக ஆட முடியும் வரை பாகிஸ்தான் அணிக்காக ஆடுவேன் என்று ஹஃபீஸ் தெரிவித்துள்ளார்.

2003ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணிக்காக ஆடிவரும் முகமது ஹஃபீஸ், இதுவரை 55 டெஸ்ட், 218 ஒருநாள் மற்றும் 95 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்