இந்த கிரீடம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் – விராட் கோலிக்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து!

Published : Jun 04, 2025, 01:30 AM IST
RCB

சுருக்கம்

MK Stalin congratulated RCB and Virat Kohli For IPL 2025 Trophy : முதல் முறையாக ஐபிஎல் 2025 டிராபி கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், விராட் கோலிக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

MK Stalin congratulated RCB and Virat Kohli For IPL 2025 Trophy : ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது முதல் முறையாக டிராபியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஆர்சிபி அணியின் 18 ஆண்டுகால போராட்டத்திற்கும், வலிக்கும் கிடைத்த முதல் பரிசாக ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசன் அமைந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு வந்த ஆர்சிபி இன்று இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக டிராபியை கைப்பற்றியுள்ளது. 6ஆவது அணியாக ஐபிஎல் 2025 டிராபியை கைப்பற்றியிருக்கிறது.

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி மட்டுமே 43 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் 191 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் கிங்ஸ் விளையாடியது.

https://twitter.com/mkstalin/status/1929960552157327760

இதில், பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிராப்சிம்ரன் சிங் இருவரும் இணைந்து அதிரடியாக தொடங்கினர். எனினும் ஆர்யா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து பிராப்சிம்ரன் சிங்கும் 26 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 1 ரன்களில் ஆட்டமிழந்தது தான் போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

கடைசி வரை போராடிய ஷஷாங்க சிங் 61 ரன்கள் எடுத்தார். போட்டியின் கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்ஹ ஓவரை ஜோஷ் ஹேசில்வுட் வீசினார். இதில் முதல் 2 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்கப்படவில்லை. இதுதான் ஆர்சியின் வெற்றியை உறுதி செய்தது. இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் டிராபியை கோட்டைவிட்டது.

இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வாலாற்றில் முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் 2025 டிராபியை தங்களுக்கு சொந்தமாக்கியது. 18 ஆண்டுகளாக ஒரு அணி டிராபியை கைப்பற்றவில்லை என்றால் எவ்வளவு கஷ்டங்களையும், வலியையும் கடந்து வந்திருக்கும் என்பது முதல் முறையாக டிராபியை கைப்பற்றும் போது தான் தெரியவரும்.

அப்படியொரு வலியைத் தான் ஆர்சிபி கடந்து வந்து இப்போது ஈ சாலா கப் நமதே என்று சொல்லும் அளவிற்கு கடைசியில் டிராபியை சொந்தமாக்கி கொண்டது. ஆர்சிபி அணியில் எத்தனையோ கேப்டன் மாற்றப்பட்டிருந்தாலும் இறுதியாக ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி முதல் முறையாக டிராபியை கைப்பற்றி பெங்களூரு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஐபிஎல் 2025 டிராபிக்கும் விராட் கோலிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. விராட் கோலியின் ஜெர்சி நம்பர் 18. இந்த சீசன் 18ஆவது ஐபிஎல் 2025 தொடர். இந்த 18ஆவது ஐபிஎல் தொடரில் ஆர்சிபி தங்களது முதல் டிராபியை தட்டி தூக்கியிருக்கிறது. இந்த நிலையில் தான் முதல் முறையாக டிராபியை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், விராட் கோலிக்கும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு சீசனின் ஒரு சிலிர்ப்பூட்டும் முடிவு. கோலி, நீங்கள் பல வருடங்களாக இந்தக் கனவைச் சுமந்து வந்திருக்கிறீர்கள், இன்றிரவு, கிரீடம் உங்களுக்கு உண்மையிலேயே பொருத்தமாக இருக்கும். அடுத்த சீசனில் Chennai IPLஇலிருந்து ஒரு வலுவான மீள் வருகையை எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?
IND vs SA: வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி, பாபர் அசாம் சாதனை சமன் செய்யப்படுமா?