டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் 11 சிறந்த எதிரி வீரர்கள்.. ஆஸி.,யை அலறவிட்ட 3 இந்திய வீரர்களுக்கு இடம்

By karthikeyan VFirst Published Apr 29, 2020, 3:29 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மைக் ஹசி, டெஸ்ட் கிரிக்கெட்டில் பெஸ்ட் 11 எதிரிகளை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார்.
 

பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஆல்டைம் ஃபேவரைட் அல்லது சிறந்த அணியை தேர்வு செய்துதான் பார்த்திருப்பீர்கள். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மைக் ஹசி, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் போட்டியாளர்களாக திகழ்ந்த 11 சிறந்த எதிரிகளை தேர்வு செய்துள்ளார். 

மைக் ஹசி ஆஸ்திரேலிய அணிக்காக 2005ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரை 79 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார் மைக் ஹசி. ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவரான மைக் ஹசி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்றுவிதமான போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்காக ஜொலித்தவர். 

இந்நிலையில், அவர் தேர்வு செய்துள்ள டெஸ்ட் கிரிக்கெட்டில் பெஸ்ட் எதிரி அணியின் தொடக்க வீரர்களாக, அதிரடி மன்னன் சேவாக் மற்றும் தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் க்ரேம் ஸ்மித் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

மூன்றாம் வரிசை வீரராக பிரயன் லாராவை தேர்வு செய்துள்ள மைக் ஹசி, நான்காம் வரிசைக்கு சச்சின் டெண்டுல்கரையும் அவருக்கு அடுத்து விராட் கோலியையும் தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டராக ஒன் அண்ட் ஒன்லி ஜாக் காலிஸை தேர்வு செய்தார். 

விக்கெட் கீப்பராக இலங்கையின் சங்கக்கராவை தேர்வு செய்த மைக் ஹசி, விக்கெட் கீப்பிங்ற்கு சங்கக்கரா, தோனி, டிவில்லியர்ஸ் ஆகிய மூவரையும் கருத்தில் கொண்டேன். ஆனால் தோனியும் டிவில்லியர்ஸும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அபாரமானவர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் சங்கக்கராதான் என்பதால் அவரை தேர்வு செய்ததாக தெரிவித்தார். 

சிறந்த எதிரி ஃபாஸ்ட் பவுலர்களாக தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன், மோர்னே மோர்கல் மற்றும் இங்கிலாந்தின் அனுபவ பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய மூவரையும் தேர்வு செய்தார். ஸ்பின் பவுலராக இலங்கையின் சுழல் ஜாம்பவானும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனைக்கு சொந்தக்காரருமான முத்தையா முரளிதரனையும் தேர்வு செய்துள்ளார்.

மைக் ஹசி தேர்வு செய்த சிறந்த 11 டெஸ்ட் எதிரிகள்:

சேவாக், க்ரேம் ஸ்மித், பிரயன் லாரா, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ஜாக் காலிஸ், குமார் சங்கக்கரா, டேல் ஸ்டெய்ன், மோர்னே மோர்கல், ஜேம்ஸ் ஆண்டர்சன், முத்தையா முரளிதரன். 
 

click me!