என் கெரியரில் எனக்கு ரொம்ப டார்ச்சர் கொடுத்தது அந்த பவுலர் தான்.. மைக் ஹசியின் தூக்கத்தை கெடுத்த ஃபாஸ்ட் பவுலர்

By karthikeyan VFirst Published Sep 27, 2019, 3:31 PM IST
Highlights

தனது கெரியரில் தான் எதிர்கொண்டதிலேயே யாருடைய பவுலிங் மிகவும் கடினமாக இருந்தது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மைக் ஹசி, அபாரமான பேட்ஸ்மேன் மட்டுமல்லாது சிறந்த ஃபீல்டரும் கூட. 

ஆஸ்திரேலிய அணியில் 2004ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரை மைக் ஹசி ஆடினார். 2013ம் ஆண்டு ஓய்வு அறிவித்தார். சூழலுக்கு ஏற்ப ஆடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தவர் மைக் ஹசி. தொடக்க வீரராகவும் ஜொலிக்கக்கூடியவர், மிடில் ஆர்டரிலும் அசத்தக்கூடியவர். அவர் ஆடும் அணி அவரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். 

185 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5442 ரன்களையும் 79 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6235 ரன்களையும் குவித்துள்ளார். கிரிக்கெட் உலகின் தலைசிறந்த மற்றும் வெற்றிகரமான கேப்டன்களாக திகழ்ந்த ரிக்கி பாண்டிங் மற்றும் தோனி ஆகிய இருவரின் கேப்டன்சியிலும் ஆடியவர் மைக் ஹசி. பாண்டிங் கேப்டன்சியின் கீழ் ஆஸ்திரேலிய அணியிலும் தோனியின் கேப்டன்சியின் கீழ் ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியிலும் ஆடியுள்ளார். 

ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவரான மைக் ஹசி, ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோவிற்கு அளித்த பேட்டியில், அவரை தூங்கவிடாமல் செய்த பவுலர் யார் என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. மைக் ஹசியின் கெரியரில் அவர் எதிர்கொண்டதிலேயே மிகவும் கஷ்டமாக இருந்தது யாருடைய பவுலிங்? என்ற கேள்விக்கு, தென்னாப்பிரிக்க பவுலர் டேல் ஸ்டெய்னின் பெயரை மைக் ஹசி குறிப்பிட்டுள்ளார். 

தனது கெரியரில் தனக்கு அதிகமான நெருக்கடி கொடுத்தது ஸ்டெய்ன் தான் எனவும், தனது தூக்கத்தை பலமுறை ஸ்டெய்ன் கெடுத்திருப்பதாகவும் மைக் ஹசி தெரிவித்துள்ளார். 

டேல் ஸ்டெய்ன் சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர். அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து டேல் ஸ்டெய்ன் ஓய்வுபெற்றது குறிப்பிடத்தக்கது. 
 

click me!