விராட் கோலியை ஃபாஃப் கண்டிப்பாக 10 வருஷத்துக்கு முந்தைய ஃபார்முக்கு கூட்டிச்செல்வார் - மைக்கேல் வான் நம்பிக்கை

By karthikeyan VFirst Published May 13, 2022, 5:01 PM IST
Highlights

ஃபார்மில் இல்லாமல் தவித்துவரும் விராட் கோலியை ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் கண்டிப்பாக 10 ஆண்டுகளுக்கு முன் அவர் இருந்த ஃபார்முக்கு அழைத்துச்செல்வார் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களாக விளாசி சாதனைகள் பல படைத்து சதங்களின் நாயகனாக திகழ்ந்துவந்த விராட் கோலி, இரண்டரை ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

இந்திய அணி மற்றும் ஆர்சிபி ஆகிய அனைத்து கேப்டன்சிகளிலிருந்தும் விலகிய கோலி, கேப்டன்சி அழுத்தம் எல்லாம் இல்லாமல் ரிலாக்ஸாகவும் முழு சுதந்திரத்துடனும் இந்த ஐபிஎல் சீசனில் அடித்து ஆடி ஸ்கோர் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐபிஎல்லிலும் சொதப்பிய விராட் கோலி, 12 போட்டிகளில் வெறும் 19.64 என்ற சராசரி, 111 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 216 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

அவரது மோசமான ஃபார்ம் ஆர்சிபிக்கு கவலையளிக்கும் நிலையில், ஃபாஃப் கண்டிப்பாக கோலியை பழைய ஃபார்முக்கு கூட்டிச்செல்வார் என்று மைக்கேல் வான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்று ஆர்சிபி அணி முக்கியமான போட்டியில் பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்ளவுள்ள நிலையில், இதுகுறித்து பேசிய மைக்கேல் வான், விராட் கோலியை ஃபாஃப் 10 ஆண்டுக்கு முன் கோலி எப்படி ஆடினாரோ அந்த ஃபார்முக்கு அழைத்துச்செல்வார் என நம்புகிறேன். இன்னும் கோலிக்கு திருமணம் ஆகவில்லை(அப்படி நினைத்துக்கொள்ளல்); குழந்தை இல்லை; அந்த காலக்கட்டத்தில் 10 ஆண்டுக்கு முன் கோலி எப்படி பேட்டிங் ஆடினாரோ, அதேமாதிரி ஆடவைக்க வேண்டும். வயதை எல்லாம் மறந்துவிட்டு களத்திற்குள் சென்று அடி துவம்சம் செய்ய வேண்டும். 

கோலி 35 ரன்கள் அடித்துவிட்டால் அதன்பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடி பெரிய ஸ்கோர் செய்துவிடுவார். அந்தன் 0-10 ரன்களை கடக்கத்தான் கஷ்டப்படுகிறார். கொஞ்சம் இளமைக்காலத்திற்கு திரும்பினால், மிகவும் அபாயகரமான வீரராக மாறிவிடுவார் கோலி என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
 

click me!