ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு இவருதான் கடும் சவால்.. மெக்ராத்தே எச்சரிக்கை விட்ருக்காருனா பாருங்க.. யார் அந்த வீரர்..?

By karthikeyan VFirst Published Jul 31, 2019, 3:29 PM IST
Highlights

ஆஷஸ் தொடரில் எந்த இங்கிலாந்து வீரர் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவாலாக இருப்பார் என்று க்ளென் மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார். 

கிரிக்கெட்டின் பாரம்பரியமான மற்றும் பழமையான தொடர் ஆஷஸ். ஆஷஸ் தொடர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்குமே முக்கியமான தொடர். இங்கிலாந்து அணி உலக கோப்பையை விட ஆஷஸ் தொடருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்.

அதிலும் இந்த முறை ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியாக நடக்கவுள்ளதால் இரு அணிகளுமே ஆஷஸில் கடுமையாக மோதும். ஆஷஸ் தொடரின் முதல் போட்டி நாளை தொடங்கவுள்ளது. 

ஆண்டர்சன் தான் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்மசொப்பனமாக இருப்பார் என்று மெக்ராத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள க்ளென் மெக்ராத், சொந்த மண்ணில் டியூக் பந்தில் ஆண்டர்சன் மிரட்டலாக பந்துவீசுவார். ஆண்டர்சனுக்கு ஆஷஸ் தொடர் சிறப்பாக அமைந்தால், ஆஸ்திரேலியாவுக்கு ரொம்ப கஷ்டமாக அமைந்துவிடும். அதேநேரத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஆண்டர்சன் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடினால், இங்கிலாந்துக்கு ரொம்ப கஷ்டம். ஆண்டர்சனின் டெஸ்ட் சாதனையை முறியடிக்க வேண்டுமென்றால் 150 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் ஆடவேண்டும் என்று மெக்ராத் தெரிவித்தார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஃபாஸ்ட் பவுலராக மெக்ராத் தான் இருந்தார். ஆனால் மெக்ராத்தை பின்னுக்குத்தள்ளி 575 விக்கெட்டுகளுடன் ஆண்டர்சன் முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனையை பற்றித்தான் மெக்ராத் பேசியுள்ளார். 
 

click me!