இவங்கதான் முதுகெலும்பு இல்லாமலேயே இருந்துட்டு போயிட்டாங்க.. இனி வர்றவங்களாவது அடங்கி போகாம அடிச்சு பேசணும்.. கவாஸ்கர் தடாலடி

By karthikeyan VFirst Published Jul 31, 2019, 2:17 PM IST
Highlights

2017ல் இலங்கைக்கு எதிரான தொடரில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் அவர் நன்றாக ஆடியும் கூட, அதன்பின்னர் புறக்கணிக்கப்பட்டார். ரஹானே ஏன் புறக்கணிக்கப்பட்டார் என்பது அனைவருக்குமே புரியாத புதிராக உள்ளது. 

உலக கோப்பைக்கு முன் இரண்டு ஆண்டுகளாக, இந்திய அணியின் நான்காம் வரிசை வீரருக்கான தேடுதல் படலம் நடத்தியும் இந்திய அணி நிர்வாகத்தால் சரியான வீரரை தேர்ந்தெடுக்க முடியவில்லை. அதற்கு காரணம், அணி நிர்வாகத்தின் இயலாமை தானே தவிர, வீரர்கள் பற்றாக்குறை அல்ல. 

2017ல் இலங்கைக்கு எதிரான தொடரில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் அவர் நன்றாக ஆடியும் கூட, அதன்பின்னர் புறக்கணிக்கப்பட்டார். ரஹானே ஏன் புறக்கணிக்கப்பட்டார் என்பது அனைவருக்குமே புரியாத புதிராக உள்ளது. அவர் அப்போதைய சூழலில் ஃபார்மில் இல்லாவிட்டாலும் தொடர்ந்து வாய்ப்பளித்திருந்தால், உலக கோப்பையில் அவரே நான்காம் வரிசையில் இறங்கி அசத்தியிருப்பார். 

அதேபோல ராயுடு நான்காம் வரிசைக்கு உறுதி செய்யப்பட்டு கடைசி நேரத்தில் தூக்கி எறியப்பட்டார். மாற்று வீரருக்கான வரிசையில் ராயுடு இருந்தும் கூட, தவான் மற்றும் விஜய் சங்கர் ஆகிய இருவரும் காயத்தால் விலகியபோதிலும் ராயுடுவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கையில், தேர்வுக்குழு தான் வீரர்களை தேர்வு செய்கிறதா அல்லது கேப்டன் கோலியின் விருப்பப்படி அணி தேர்வு நடக்கிறதா என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது. கோலியின் விருப்பப்படிதான் அணி தேர்வு அமைகிறது என்பது ஊரறிந்த உண்மை. 

அணி நிர்வாகத்தின் கோரிக்கையின் அடிப்படையில்தான், உலக கோப்பையின் இடையே தவான் காயத்தால் விலகியபோது அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டையும், விஜய் சங்கருக்கு பதிலாக மயன்க் அகர்வாலையும் எடுத்தோம் என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்திருந்தார். அதற்கு அசாருதீனே கூட எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தேர்வுக்குழு எடுத்து கொடுக்கும் அணியை வைத்து ஆடுவதுதான் அணி நிர்வாகத்தின் பணி. அணி நிர்வாகம் கேட்கும் வீரர்களை எல்லாம் எடுத்துக்கொடுக்க வேண்டிய அவசியம் தேர்வுக்குழுவிற்கு இல்லை என அசாருதீன் கடுமையாக சாடியிருந்தார். 

இந்நிலையில், கவாஸ்கரும் அதே கருத்தைத்தான் தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அணியை தேர்வு செய்தது தான், தற்போதைய தேர்வுக்குழுவின் கடைசி தேர்வாக இருக்கும். அதன்பின்னர் புதிய தேர்வுக்குழு அமைக்கப்படவுள்ளது. அடுத்து வரும் தேர்வுக்குழுவாவது, நாங்கள் எடுத்துக்கொடுக்கும் அணியை வைத்துத்தான் நீங்கள் ஆட வேண்டும் என்ற மெசேஜை அணி நிர்வாகத்துக்கு ஸ்ட்ராங்கா சொல்லும் என நம்புகிறேன் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 
 

click me!