#AUSvsIND மேட்ச் தொடங்கி 20 நிமிசத்துல ஆடுற ஷாட்டா அது..? வார்னரை கிழித்தெறிந்த மார்க் வாக்

By karthikeyan VFirst Published Jan 7, 2021, 6:30 PM IST
Highlights

4வது ஓவரிலேயே கவர் டிரைவ் ஆட முயற்சித்து அவுட்டாகிய டேவிட் வார்னரை ஆஸி., முன்னாள் வீரர் மார்க் வாக் விளாசியுள்ளார். 
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆஸி., அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் அடித்துள்ளது.

முதல் 2 போட்டிகளில் ஆடிராத வார்னர் இந்த போட்டியில் ஆடினார். வார்னரும் அறிமுக வீரர் வில் புகோவ்ஸ்கியும் தொடக்க வீரர்களாக இறங்கினர். இன்னிங்ஸின் 4வது ஓவரிலேயே முகமது சிராஜின் பந்தில் ஸ்லிப்பில் நின்ற புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஐந்து ரன்களுக்கு நடையை கட்டினார் வார்னர்.

4வது ஓவரிலேயே கவர் ஷாட் ஆட முயன்று ஆட்டமிழந்தார் வார்னர். வார்னர் அவசரப்பட்டதை கடுமையாக விமர்சித்துள்ளார் ஆஸி., முன்னாள் வீரர் மார்க் வாக். இதுகுறித்து பேசியுள்ள மார்க் வாக், வார்னர் ஆடியது மிகவும் தளர்வான ஷாட். ஆட்டம் ஆரம்பித்த 20 நிமிடத்தில் ஆட வேண்டிய ஷாட் அல்ல அது. அதுவும் வைடான பந்தை போய் டிரைவ் ஆட வேண்டிய அவசியமே இல்லை. ரன் எடுக்க வேண்டும் என்ற அவரது அவசரத்தைத்தான் இது காட்டுகிறது. ஆனால் அந்த ஷாட்டை அவசரப்பட்டு ஆடியிருக்க வேண்டியதில்லை. அப்படியே ஆடுவதாக இருந்தாலும் கொஞ்சம் நகன்று வந்தாவது ஆடியிருக்க வேண்டும் என்று வார்னரின் அவசரத்தை விமர்சித்துள்ளார் மார்க் வாக்.
 

click me!