எதிரணி வீரரை கேவலமா விமர்சித்த ஸ்டோய்னிஸ் மீது அதிரடி நடவடிக்கை

By karthikeyan VFirst Published Jan 5, 2020, 3:01 PM IST
Highlights

பிக்பேஷ் லீக் தொடரில் எதிரணி வீரரை படுமோசமாக விமர்சித்ததற்காக மார்கஸ் ஸ்டோய்னிஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
 

ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் லீக் தொடர் நடந்துவருகிறது. மேக்ஸ்வெல் தலைமையிலான மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் ஆடும் மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிகச்சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார். 

இந்நிலையில், மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிக்கு எதிராக நேற்று ஆடிய போட்டியிலும் மிகவும் அபாரமாக ஆடினார். ரெனெகேட்ஸ் அணி நிர்ணயித்த 143 ரன்கள் என்ற இலக்கை கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று, 68 ரன்களை குவித்து, அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 

இந்த போட்டியில் ரெனெகேட்ஸ் அணியின் வீரர் கேன் ரிச்சர்ட்ஸனை ஓரினச்சேர்க்கையாளர் என்று கடுமையான வார்த்தைகளை கூறி அவரை அவமதிக்கும் விதமாக ஸ்லெட்ஜிங் செய்துள்ளார். இதையடுத்து போட்டிக்கு பின்னர் இதுகுறித்து களநடுவர்கள் கெரார்டு அபூட் மற்றும் ஃபிலிப் கில்லெஸ்பி ஆகிய இருவரும் போட்டி நடுவரிடம் புகாரளித்தனர். 

இதுகுறித்து மார்கஸ் ஸ்டோய்னிஸிடம் நடுவர் விசாரிக்கையில், தனது தவறை ஸ்டோய்னிஸ் ஒப்புக்கொண்டார். ஐசிசி விதிப்படி மற்ற வீரர்களை தகாத வார்த்தைகளை கூறி திட்டவோ விமர்சிக்கவோ கூடாது. அந்தவகையில், ஸ்டோய்னிஸே ஒப்புக்கொண்டதால், அவர் கேன் ரிச்சர்ட்ஸனை திட்டியது உறுதியானதை அடுத்து, ஸ்டோய்னிஸுக்கு $7500(ரூ.5.37 லட்சம்) அபராதமாக விதிக்கப்பட்டது. 
 

click me!