மார்கஸ் ஸ்டோய்னிஸின் மற்றுமொரு காட்டடி தர்பார்.. சொன்னது பாண்டிங், செஞ்சது ஸ்டோய்னிஸ்

By karthikeyan VFirst Published Feb 6, 2020, 4:03 PM IST
Highlights

பிக்பேஷ் டி20 லீக் தொடரில் இறுதி போட்டிக்கு தகுதிபெறும் சேலஞ்சர் போட்டியில் சிட்னி தண்டர் அணிக்கு எதிராக, மீண்டுமொருமுறை அபாரமாக ஆடியுள்ளார். 
 

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக்பேஷ் லீக் தொடரின் இறுதி போட்டிக்கு சிட்னி சிக்ஸர்ஸ் அணி தகுதிபெற்றுவிட்ட நிலையில், இறுதி போட்டியில் ஆடும் மற்றொரு அணியை தீர்மானிக்கும் சேலஞ்சர் போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. 

மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, 20 ஓவரில் 193 ரன்களை குவித்துள்ளது. 

இந்த சீசன் முழுவதுமே சிறப்பாக ஆடிவரும் மார்கஸ் ஸ்டோய்னிஸ், இந்த போட்டியிலும் அசத்தலாக ஆடினார். பிக்பேஷ் லீக்கில் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தபோதிலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு தொடர்களுக்குமான ஆஸ்திரேலிய அணியிலும் ஸ்டோய்னிஸ் புறக்கணிக்கப்பட்டார். 

இந்நிலையில், இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ஸ்டோய்னிஸ், 54 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 83 ரன்களை குவித்தார். மற்றொரு தொடக்க வீரர் மேடின்சன் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் மூன்றாம் வரிசையில் இறங்கிய நிக் லார்கின், ஸ்டோய்னிஸுடன் இணைந்து அதிரடியாக ஆடி அவருக்கு நிகரான ரன்களை அடித்தார். லார்கின் 49 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் அவரும் 83 ரன்களை விளாச, மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவரில் 193 ரன்களை குவித்தது. 194 ரன்கள் என்ற இலக்குடன் சிட்னி தண்டர் அணி ஆடிவருகிறது. 

Also Read - ராகுல் டிராவிட் அனுப்பிவைத்த வீடியோ.. உத்வேகத்தில் பாகிஸ்தானை ஊதித்தள்ளிய அண்டர் 19 இந்திய வீரர்கள்

ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸுக்கு இடம் கிடைக்காததற்கு வருத்தம் தெரிவித்த முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், தொடர்ந்து ஸ்டோய்னிஸ் சிறப்பாக ஆடி ரன்களை குவித்துக்கொண்டே இருக்க வேண்டும். ரன்களை குவிப்பதன் மூலமாக தனது இருப்பை தேர்வாளர்களுக்கு காட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதேபோலவே ஸ்டோய்னிஸ் தனது சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்துவருகிறார். 
 

click me!